CM ஸ்டாலின் புதிய அரண்மனை..!

*CM ஸ்டாலின்*

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வாழ்வில் கோபாலபுரத்திற்க்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. திமுக தலைவரும் ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தவர் கருணாநிதி வாழ்ந்து மறைந்தது கோபாலபுரம் தான். அந்தவகையில் முக ஸ்டாலின் பிறந்தது வளர்ந்தது கோபாலபுரத்தில் தான். முக ஸ்டாலின் திமுகவின் இளைஞர் அணியை உருவாக்கியது கோபாலபுரத்தில் தான்.

திருமணத்திற்குப் பிறகு கூட முக ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள வீட்டில்தான் வசித்து வந்தார். ஆனால் முக ஸ்டாலினின் மகன் உதயநிதியின் திருமணத்திற்குப் பிறகு குடும்பம் பெரிதானது. இதனையடுத்து சென்னையில் சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டிற்கு குடிபெயர்ந்தார் முக ஸ்டாலின். தற்போது மனைவி, மகன், மருமகளுடன் சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டில்தான் வசித்து வருகிறார்.

முக ஸ்டாலின் முதலமைச்சர் ஆனபிறகும் முதலமைச்சருக்கான முகாம் அலுவலகம் கூட சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டில்தான் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட வீடு கட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது வேறு யாரு வீடும்மில்லை முக ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடுதான்.

சபரீசனை திருமணம் செய்து கொண்டபிறகு முக ஸ்டாலின் மகள் செந்தாமரை சென்னை நீலாங்கரையில் வசித்து வருகிறார். இங்கு அவ்வப்போது முக ஸ்டாலின் சென்று வருவது வழக்கம். முக ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு செந்தாமரை தான் அடிக்கடி தன் தந்தை ஸ்டாலினை பார்க்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

ஆண்டிற்கு ஒருமுறை முக ஸ்டாலின் லண்டனுக்கு சென்று தன் உடலை முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்வது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காலமாக இருப்பதால் லண்டனுக்கு அவரால் செல்ல முடியவில்லை. இந்த ஆண்டு புத்தாண்டு அன்று முக ஸ்டாலின் லண்டன் போவதற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஆனால் தற்போது லண்டனில் ஓமிக்ரான் வைரஸ் பரவி வருவதால் லண்டன் பயணம் ரத்தானது.

அதற்கு பதிலாக லண்டனிலிருந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் சென்னை கொண்டு வர உள்ளதாகவும் அந்த சோதனையை மேற்கொள்ளவே சென்னை நீலாங்கரையில் உள்ள மகள் செந்தாமரை வீட்டிற்கு செல்ல உள்ளதாக கூறுகிறார்கள்.

இந்த பரிசோதனை முடிவதற்க்கு எப்படியும் ஒரு வார காலங்கள் ஏற்படும் அதன் தொடர்ச்சியாக சில சிகிச்சைகள் நடத்தப்படும் என்றும் இதற்காக கூடுதலாக ஸ்டாலின் நீலாங்கரையில் உள்ள மகள் வீட்டில் தங்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.

இதற்காகவே ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் ஒரு முகாம் அலுவலகத்தை ஏற்பாடு செய்ய பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் முக ஸ்டாலின் அங்கு சென்று தங்குவார் என்று கூறுகிறார்கள். இந்தநிலையில் சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் இந்த வீட்டில் தான் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.