வருகிறது CWC Season 3 தேதி..!

*குக் வித் கோமாளி சீசன் 3*

தொலைக்காட்சிகளில் பல Reality Showகள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால் “குக் வித் கோமாளி” இன்னும் நிகழ்ச்சி பலரால் ரசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வந்தது. குறிப்பாக “குக் வித் கோமாளா சீசன் 2” அனைவராலும் ரசிக்கப்பட்டு பார்க்கப்பட்டவை என்று கூறலாம்.

கடந்த ஆண்டு விஜய் டிவியில் “குக் வித் கோமாளி சீசன் 2” ஒளிபரப்பாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஒரு சமையல் போட்டியை எவ்வளவு நகைச்சுவையாக காட்ட முடியும் என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்தியது.

இந்த நிகழ்ச்சியில் குக்குகளாக ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின் குமார், பவித்ரா லட்சுமி, தர்ஷா குப்தா, கனி, தீபா கலந்து கொண்டனர். கோமாளிகளாக சிவாங்கி, புகழ், பாலா, மணிமேகலை, சுனிதா, விஜே பார்வதி, சக்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கோமாளிகளின் அட்டகாசமான நகைச்சுவையால் இந்த நிகழ்ச்சி மக்களிடம் பெரு வரவேற்பைப் பெற்றது.

குக் வித் கோமாளி சீசன் 2 முதல் சீசனை விட பெரும் வரவேற்பை பெற்று பலருடைய Favorite ஷோவாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து அவர்கள் எல்லோரும் பிரபலம் அடைந்தனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் சீசன் 3 எப்போது வரும் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

குக் வித் கோமாளி சீசன் 3 முன்னதாக டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று தகவல் வந்தது ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சீசன் 3கான வேலைகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 5 முடிந்தபிறகு குக் வித் கோமாளி சீசன் 3 ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 5 முடிவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன.