காவலர்களை தாக்கிய கொரோனா

*காவலர்களை தாக்கிய கொரோனா*

இந்தியாவில் உள்ள மராட்டிய மாநிலத்தில் கொரோனாவின் இரண்டாம் அலையின் போது ஆயிரக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் தொற்றுக்கு ஆளான நிலையில் தற்போது அங்கு மீண்டும் பாதிக்கப்படும் போலீஸார்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் நேற்று மட்டும் 41,327 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மும்பையில் மட்டும் 7,895 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் மராட்டிய மாநிலத்தில் 63 போலீஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது இதில் ஒரு போலீஸார் இறந்துவிட்டார்.

இதுவரை மராட்டிய மாநிலத்தில் 127 போலீசார் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனிடையே துபாய் மற்றும் அரபு அமீரகத்தில் இருந்து மும்பை வரும் பயணிகளுக்கு ஏழு நாட்கள் கட்டாய வீட்டு தனிமை கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு டெல்லியில் 18,286, மேற்கு வங்கத்தில் 14,938, பஞ்சாபில் 7,396 பேருக்கு தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்தியா முழுவதும் 2,71,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து 1,38,331 நபர்கள் குணமடைந்துள்ளனர்.

இதனால் இந்தியாவில் கொரோனாவில் இருந்து 3.50 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இந்திய நாடு முழுவதும் இதுவரை 7,743 பேருக்கு கொரோனாவின் மாறுபாடான ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.