தமிழகத்தில் நேற்று மட்டும் இத்தனை ஆயிரம் நபர்களுக்கு கொரோனாவா?

*இத்தனை ஆயிரம் நபர்களுக்கு கொரோனாவா*

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீட்டுக்கு திரும்பியவர்கள், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் 12,895 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கொரோனா பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 1808 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 6186 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பேர் சென்னையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 51,335 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் 12 பேர் என்ற தகவல் கூறுகிறது. இதை அனைத்தையும் மக்கள் நல்வாழ்வுத்துறை தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.