33 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தோற்று

*33 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா*

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரி யில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா என்ற பள்ளியில் முப்பத்திமூன்று மாணவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதாக கொரோனா பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் அப்பள்ளியை அதிகாரிகள் மூட வைத்தனர்.

சில நாட்களுக்கு முன்பு தான் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்பிற்காக பள்ளிகள் திறக்கப்பட்டது. நேரடி வகுப்புகள் தொடங்கி ஐந்து நாட்களே ஆகிய நிலையில் பத்தாம் வகுப்பு பயிலும் முப்பத்தி மூன்று மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவியதாக பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப் பட்டனர்.