VJ பிரியங்காவுக்கு COVID Positive?

*VJ பிரியங்காவுக்கு COVID*

விஜய் டிவியின் முக்கிய மற்றும் பிரபலமான தொகுப்பாளர் தான் பிரியங்கா. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பிரியங்காவிற்கு மக்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். பிரியங்காவின் உண்மையான முகம் பிக்பாஸ் வீட்டில் வெளியானது. அடிக்கடி பிரியங்காவிக்கும் தாமரைச்செல்விக்கும் நடக்கக்கூடிய சண்டை வழக்கமாகவே மாறிவிட்டது.

தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டியுள்ளது. இதில் பிரியங்கா ஜந்து இறுதி போட்டியாளர்களிள் ஒருவராக தேர்வாகியுள்ளார். பலர் பிரியங்கா தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 5இன் வின்னர் என்று கூறிவருகின்றனர்.

இறுதி வாரம் என்பதால் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். எல்லோரும் சந்தோஷமாக சிரித்துப் பேசி அன்பைப் பகிர்ந்து கொண்டனர்.

திடீரென்று பிரியங்காவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி தற்போது பிரியங்கா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பிரியங்காவின் உடல்நிலை சரியான பிறகு பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார் என்று கூறப்படுகிறது.