இன்னும் நிங்க Cryptocurrency நம்புறீங்கால இதை படியுங்கள்.!!

Cryptocurrency :-

Cryptocurrency இந்த வார்த்தையை நீங்கள் பல இடங்களில் கேள்விப்பட்டிருக்க முடியும் அது நீங்கள் பார்த்து இருக்க முடியும். அல்லது பல வீடியோக்களை யூடியூப் களிலும் பல பதிவுகளில் வழியாகவும் பார்த்திருக்க முடியும். இந்த பதிவில் நாம் cryptocurrency என்றால் என்ன என்பது பற்றியும், அதனால் என்ன பயன் என்பது பற்றியும் ? அதை நம்பலாமா வேண்டாமா என்பது பற்றியும் ? இந்த பதிவில் முழுவதுமாக பார்ப்போம்.

Cryptocurrency என்றால் என்ன ?

Read More :- 2022-யில் உங்கள் பணத்தை சேமிக்க சிறப்பான 10 வழிகள் இதோ.!

நான்தான் கூறியதுபோல கிரிப்டோகரன்சி என்னும் வார்த்தையை நீங்கள் அதிக இடங்களில் கேள்விப்பட்டிருக்க முடியும். அதாவது கிட்டத்தட்ட இந்த 2016 க்கு பிறகு இந்த கிரிப்டோகரென்ஸி என்னும் வார்த்தை மட்டும் கிரிப்டோகரன்சி நிறுவனங்கள் அபாரமாக செயல்பட்டு வருகிறது என்று கூறலாம்.

காரணம் மக்கள் எந்தவித ஆதாரமும் இன்றி இதை கண்மூடித்தனமாக நம்புகிறார்கள் என்பது தான் உண்மை என்று பொருளாதார நிபுணர்களின் கருத்து ஒரு பக்கம் இருக்கிறது. மேலும் அதைப் பற்றி நாம் இந்த பதிவில் முழுவதுமாக பார்ப்போம்.

Cryptocurrency என்பது ஒரு டிஜிட்டல் வடிவத்தில் இருக்கும் ஒரு நாணயம் என்று கூறலாம். நாம் இந்தியாவில் இப்போது 5 ரூபாய் நாணயங்களைப் தயாரித்து பயன்படுத்தி வருகிறோம். அதுபோல டிஜிட்டலில் கிரிப்டோகரன்சி இன்னும் நாணயம் உள்ளது. கிட்டோ கரன்சி என்பது டிஜிட்டல் வழியாக உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படும் மற்றும் டிஜிட்டல் வழியாகவே செலவு செய்யப்படும் ஒரு டிஜிட்டல் நாணயம் ஆகும்.

மேலும் டிஜிட்டல் வழியாக தானே நாம் இதை உருவாக்குகிறோம் அதனால் நம்மால் உருவாக்க முடியுமா என்று கேட்டால் ? அது நிச்சயமாக இல்லை !! நம்மால் போலியான டிஜிட்டல் கிரிப்டோகரன்சிகளை உருவாக்கவே முடியாது என்று கூறலாம். ஒவ்வொரு டிஜிட்டல் கிரிப்டோகரன்சி நாணயங்களுக்கும் ஒரு மதிப்பு இருக்கிறது.

இதை நாம் உதாரணத்துடன் பார்க்கலாம் :- நீங்கள் ஒரு கடையில் பொருட்களை வாங்குகிறார்கள் பொருட்களை வாங்கி உங்களிடம் சில்லரை இல்லை என்று அதை விட அதிகமான பணத்தை திரும்பி செலுத்துகிறீர்கள். அதற்கு கடைக்காரர் அவரிடம் சில்லறை இல்லை என்று விட்டு ஒரு டோக்கனை கொடுக்கிறார் நீங்கள் மீண்டும் அதே கடையில் சென்று அந்த டோக்கனை பயன்படுத்தி பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். இதைத்தான் கிரிப்டோகரன்சி டிஜிட்டல் நாணயம் செய்து வருகிறது‌.

மேலும் நான் முதலில் கூறியது போல இந்த டிஜிட்டல் நாணயத்தின் பயன்பாடு என்பது உலக அளவில் அதிகரித்துள்ளது. மேலும் இது உலக அளவில் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக ஒரு சில இடங்களில் உள்ளது.

இந்த cryptocurrency என்னும் டிஜிட்டல் நாணயத்தை பயன்படுத்தி நீங்கள் உலக அளவில் பொருட்கள் அல்லது சேவைகளை வாங்க முடிகிறது. மேலும் நீங்கள் உலக அளவில் பொருட்கள் அல்லது சேவைகளை இந்த டிஜிட்டல் நாணயம் வழியாக விற்பனை செய்ய முடிகிறது. மேலும் இப்போது உலக அளவில் இந்த டிஜிட்டல் கிரிப்டோகரென்ஸி பல்வேறு நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

அடுத்ததாக கிரிப்டோகரன்சிகள் மையப்படுத்தாதவை என்று கூறுகிறார்கள். அதாவது கிரிப்டோகரன்சி எந்த ஒரு நிறுவனமும் கட்டுப்படுத்தவில்லை என்று தெரிகிறது.

மேலும் இந்த கிரிப்டோகரன்சி என்னும் டிஜிட்டல் நாணயங்கள் மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப் பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிகிறது. மேலும் எந்த ஒரு அரசாங்கத்தின் தலையிடும் கிரிப்டோகரன்சி நாணயங்களில் கிடையாது. அத்துடன் கிரிப்டோகரன்சிகளுக்கு எல்லைகள் கிடையாது என்று தெரிகிறது.

Cryptocurrency என்பது எவ்வாறு வேலை செய்கிறது ?

Cryptocurrency என்னும் டிஜிட்டல் வகை நாணயங்கள். பிளாக்செயின் என்னும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. இந்த பிளாக் செயின் என்னும் தொழில்நுட்பத்தின் வழியாக நீங்கள் ஒரு பிட்காயினை மற்றவர்க்கு விற்கும் போது உங்களின் தகவல்களும் வாங்குபவர்களின் தகவல்களும் பிளாக் செயின் எனும் தொழில்நுட்ப அடிப்படையில் பதிவு செய்யப்படுகிறது.

Read More :- LIC-க்கு ஒரே ஒரு நாளில் மட்டும் 2500 கோடி எப்படி.!!

இதை யார் உருவாக்கினார்கள் என்று தெரியுமா ?

இன்னும் இதுவரை இது உருவாக்குபவர்கள் தனிநபர் அல்லது குழுக்கள் என்று தெரியவில்லை. சடோஷி நாகமோடோ என்பவர்தான் முதலில் 2009 ஆம் ஆண்டு பிட்காயின் என்னும் டிஜிட்டல் நாணயத்தை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இது யாரென்று இதுவரை தெரியவில்லை என்பதும் ஒரு பக்கம் இருக்கிறது. மேலும் இதிலிருந்து நாம் இதை யார் உருவாக்குகிறார்கள் என்பது பற்றி நம்மால் தெரிந்து கொள்ள முடியவில்லை என்பது பற்றி.

Cryptocurrency-யை மக்கள் நம்புகிறார்களா ?

இந்தக் கேள்விக்கான பதில் நிச்சயமாக ஆம் !! பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் காயின் அதாவது கிரிப்டோகரன்சி போன்றவைகளை நம்புகிறார்கள் என்பதுதான் உண்மை. இதை நாம் உதாரணத்துடன் பார்ப்போம் என்றால்.

பிட்காயின் கள் தொடங்கப்பட்ட ஒரு சில காலத்தில் பிட்காயின் உடைய விலை என்பது ஒரு சில டாலர்களாகும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ஒரு பிட்காயின் உடைய விலை என்பது 1000 டாலர்கள் ஆகும். இதிலிருந்தே நாம் தெரிந்துகொள்ள முடிகிறது மக்கள் இதை நம்புகிறார்களா இல்லையா என்று.

நான் முதலில் கூறியது போல பெரும்பாலான மக்கள் இந்த டிஜிட்டல் காயின் என்று அழைக்கப்படும் கிரிப்டோகரன்சிகலை பெரும்பாலும் நம்புகிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

பிரபலமான சில கிரிப்டோகரன்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளது :-

BitCoin :-

பிட்காயின் என்று அழைக்கப்படும் இந்த டிஜிட்டல் வகை நாணயம் உலக அளவில் மிகவும் பிரபலம் அடைந்தது என்று கூறலாம். இது 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடங்கிய சில நாட்களில் நல்ல வரவேற்ப்பை மக்களிடமிருந்து பெற்றது என்று தெரிகிறது. இப்போது ஒரு பிட்காயின் உடைய விலை என்பது ஆயிரம் டாலர்கள் ஆகும்.

Ethereum :-

Ethereum என்று அழைக்கப்படும் இந்த நாணயம் பிட்காயினிற்கு பிறகு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்று தெரிகிறது. மேலும் இந்த டிஜிட்டல் நாணயமும் பல மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Binary Coin :-

கிரிப்டோ பரிவர்த்தனை நிறுவனமான பைனான்ஸ் எனும் நிறுவனம் இந்த காயினை அறிமுகப்படுத்தியது. மேலும் இதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற காய்ன்களில் ஒன்றாகும்.

Crypto Currency-களை எப்படி வாங்குவது ?

நான் முதலில் கூறியது போல கிரிப்டோகரன்சி என்னும் காயின் டிஜிட்டல் வழியாக வாங்கப்படும் மற்றும் விற்பனை செய்யப்படும் ஒரு காயின் ஆகும். இதை நீங்கள் நேரில் வாங்க முடியாது அதாவது இணைய வழி மூலமாக மட்டுமே இந்த காயினை வாங்கவும் விற்கவும் செய்ய முடியும்.

இப்போது நாம் இந்தக் காயினை எப்படி வாங்குவது என்பதை பற்றி மேலோட்டமாக பார்க்கலாம்.

மேலும் இந்தியாவில் மட்டும் கிரிப்டோகரன்சி இன்று முதலீடு செய்தவர்கள் எண்ணிக்கை பல ஆயிரம் என்று கூறலாம். இந்தியாவிலிருந்து மட்டும் 40 பிலிப்பைன் அமெரிக்க டாலர்களை பிட்காயின் முதலீடு செய்து உள்ளார்கள் என்பது பற்றி தெரிகிறது.

அப்போது நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அந்த அளவிற்கு பிட்காயின் உடைய பயன்பாடும் நம்பிக்கையும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நீங்கள் பிட்காயினை வாங்க வேண்டுமென்று நினைத்தால் BitCoin Exchange என்னும் வலைத்தளங்களுக்கு சென்று விற்பனை வாங்கவும் விற்கவும் செய்யலாம். மேலும் நீங்கள் பிட்காயினை வாங்க கிரெடிட் கார்ட் டெபிட் கார்ட் போன்ற வசதிகளும் இடம்பெறுகின்றன. எனவே நீங்கள் உங்களிடமிருக்கும் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் போன்றவற்றை களைப் பயன்படுத்தி ஒரு பிட்காயினை வாங்க முடியும்.

நீங்கள் பிட்காயின் வாங்கிய பிறகு அதை சேமித்து வைக்க ஒரு வாலட்டை (Wallet) உருவாக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் நீங்கள் பிட்காயினை வாங்குவதற்கு முன்பே ஒரு வாலட்டை உருவாக்கி வைப்பது என்பது சிறந்ததாக இருக்கும் என்கிறார்கள்.

இன்னும் நிங்க Cryptocurrency நம்புறீங்கால இதை படியுங்கள்.!!

மேலும் நீங்கள் இன்னும் கிரிப்டோகரன்சி பற்றி நம்பிக் கொண்டு இருக்கிறீர்களா ? ஆனால் பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி பிட்காயின் என்பதை நீங்கள் நம்பிவிட வேண்டாம் என்றுதான் கூறுகிறார்கள்.

மேலும் பல லட்சம் பேர் இதை நம்பினாலும் அதில் முதலீடு செய்தாலும் நீங்கள் இதை ஒருபோதும் செய்ய வேண்டாம் என்று கூறுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள். மேலும் பிட்காயின் போன்றவற்றை உருவாக்கியவர்கள் நினைத்தால் அவற்றை முழுவதுமாக அழித்து விட முடியும் என்கிறார்கள்.

மேலும் பிட்காயின் என்பது ஒரு சொத்து என்பதே கிடையாது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். நீங்களும் ஒரு பிட்காயினை வாங்கி வைக்க வேண்டும் என்றால் பல லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்கிறார்கள். நீங்கள் அவ்வளவு தொகையை செலுத்தி ஒரு பிகினி வாங்கி வைத்தாலும் அது உங்களுக்கு ஒரு சொத்தாக இருக்காது என்கிறார்கள்.

பொருளாதார நிபுணர்கள் மட்டுமின்றி இந்திய ரிசர்வ் வங்கியும் இந்திய மக்களை அறிவுறுத்தியுள்ளது. அதாவது பிட்காயினை முழுவதுமாக நம்பி விட வேண்டாம் என்பது பற்றியும். பிட்காயின்களுக்கு மற்றும் கிரிப்டோகரன்சிகளுக்கு முழுக்க முழுக்க எதிரான கருத்துக்களை மட்டுமே இந்திய ரிசர்வ் வங்கி முன்வைத்து இருக்கிறது.

நீங்கள் ஆன்லைனில் பார்ப்பது வழியாக மட்டும் வைத்துக் கொண்டு உங்களுடைய பல லட்சம் ரூபாய்களை பிட்காயின் வாங்குவதில் செலவு செய்ய வேண்டாம்.

எனவே பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி நீங்க டிஜிட்டல் காயின்களை வாங்குவது என்பதும் பிட்காயின் போன்றவைகளை முதலீடு செய்யாமல் இருப்பதும் சிறந்தது என்று கூறுகிறார்கள்.

எனவே பல நபர்கள் நம்பி இதில் முதலீடு செய்தாலும் நீங்கள் இதை நம்ப வேண்டாம் என்று கூறுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

இன்னும் நிங்க Cryptocurrency நம்புறீங்கால இதை படியுங்கள்.!!