மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு

*ஊரடங்கு*

உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பல நாடுகளில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல் படுத்தி உள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனாவின் மூன்றாவது அலை பரவத் தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கும் சில மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய நாடு முழுவதும் கொரானா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஒன்றிய குடும்ப நலத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்தாய்வு மேற்கொண்டார்.

இந்திய நாட்டில் தினசரி கொரோனாவின் பாதிப்பு மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளதையடுத்து நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே ஓமிக்ரான் பரவலும் வேகமெடுத்து பரவி வருவதால் பரவலை கட்டுப்படுத்த நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஒன்றிய குடும்ப நலத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்தாய்வு நடத்தினார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் நாடு முழுவதும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அனைத்து மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்களுடன் ஒன்றிய குடும்ப நலத்துறை அமைச்சர் Mansukh Mandaviya இன்று கருத்தாய்வு நடத்த உள்ளார். கொரோனா பாதிப்பு கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை குறித்து அவர் கேட்டறிவார் என்று தகவல் கூறுகின்றன.