கார் எப்போ Sir வரும் வாடிக்கையாளர்கள் கேள்வி..?

*கார்*

நாட்டில் 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் புக் செய்துள்ள புதிய கார் எப்போது கிடைக்கும் என டெலிவரிக்காக காத்திருக்கின்றனர்.

வெயிட்டிங் பீரியட் தொடர்ந்து அதிகரித்து வருவதால் புக் செய்யப்பட்ட புதிய கார்கள் டெலிவரி செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. சமீப காலமாக அனைத்து மாடல்களுக்கும் வெயிட்டிங் பீரியட் காணப்படுகிறது.

செமிகண்டக்டர்களின் பற்றாக்குறையால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக கார் நிறுவனங்களும் புதிய காரை புக் செய்துள்ளவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

காரின் எலக்ட்ரானிக் பார்ட்டான செமிகண்டக்டர் சிப்ஸ்களுக்கு மைக்ரோசிப் ஷார்டேஜ் பற்றாக்குறையால் காரை முழு திறனில் உற்பத்தி செய்ய முடியவில்லை என்று கார் நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் நாட்டில் சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் புக் செய்யப்பட்ட கார்கள் எப்போது வரும் என்று கேட்ட வண்ணம் உள்ளனர்.

கார் நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தினாலும் வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் கார்களில் டெலிவரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தனால் காரின் கட்டணங்கள் Applicable Price மற்றும் Input Costs அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் சுமார் 6 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் வெயிட்டிங் பீரியட் சில மாதங்கள் அல்லது ஒரு வருடம் கூட ஆகலாம் என்று தகவல் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து அதிகரித்து வரும் வெயிட்டிங் பீரியட் காரணமாக கார் நிறுவனங்களுக்கு புக்கிங் மிகப் பெரிய சுமையாக உள்ளது. இதில் சுமார் 2.15 லட்சம் வெயிட்டர்ஸ் உள் நாட்டு நிறுவனமான மாருதி கார்களுக்கு காத்திருக்கின்றனர் இது பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இதைத்தொடர்ந்து டாட்டா மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் தங்களது மாடல்களுக்கு தலா ஒரு லட்சம் பேக்லாக் வைத்துள்ளனர். உற்பத்தியாளர்கள் அனைவரும் இப்பிரச்சனையை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.