ஒரு பெயரை மாற்றியது குத்தமா? 446 கோடி போச்சு!

*பெயரை மாற்றியது குத்தமா*

ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் அவர்களுடைய பெயரை Meta என்று மாற்றியதால் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கும் மற்றும் மற்றவர்களுக்கும் நிறைய பிரச்சனைகள் வந்துள்ளது.

முதலில் இந்த பெயர் Meta ஒரு வங்கிக்கு Trademarkகாக இருந்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் இந்த Trademark ஐ சுமார் 60 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளனர் இந்திய மதிப்பின்படி 446 கோடி ரூபாய்.

Meta என்கிற User Name ஃபேஸ்புக்கிற்கு Twitterல் கிடைத்துவிட்டது ஆனால் அவர்களுடைய Own Platformஆன இன்ஸ்டாகிராமில் கிடைக்கவில்லை. Bike Magazine அமைப்பு இந்த Meta என்கிற பெயரை வைத்திருந்தனர்.

ஆரம்பத்தில் wearemeta என்கிற user nameல் தான் ஆரம்பித்தனர். தற்போது Meta என்கிற user name ஃபேஸ்புக் நிறுவனத்திடம் தான் உள்ளது. இதை எப்படி இவர்கள் வாங்கினார்கள் என்பது பற்றி தெரியவில்லை.

2012ல் இருந்து ஒரு ஆர்டிஸ்ட் Metaverse என்கிற பெயரை இன்ஸ்டாகிராமில் வைத்திருந்தனர் சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் Meta என்று தங்களுடைய பெயரை மாற்றிய பிறகு Metaverseயுடைய Account ஐ செயலிழக்கச் செய்து தடை செய்துவிட்டனர்.

இந்தக் குறிப்பிட்ட விஷயம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் தங்களுடைய பெயர் கெட்டுப் போகாமல் இருக்க அந்த Metaverse Account ஐ திருப்பிக் கொடுத்து விட்டனர்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்று பார்த்தால் ஃபேஸ்புக் நிறுவனம் தங்களுடைய பெயரை Meta என்று மாற்றிய பிறகு கனடா நாட்டில் உள்ள Meta Materials பெயருடைய நிறுவனத்தின் Stocks 20% எகிறியுள்ளது. Meta Materials மற்றும் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.