Tesla Baby பற்றி உங்களுக்கு தெரியுமா..!

*Tesla Baby*

டெஸ்லா காரின் Autopilot உதவி மூலமாக ஒரு குழந்தை பிறந்துள்ளது. அமெரிக்காவிலுள்ள Philadelphia என்னும் நகரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Yiran Sherry மற்றும் Keating ஆகிய தம்பதியினர் தங்களுடைய இரண்டாவது குழந்தைக்காக காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் ஒரு நாள் Yiranற்க்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது.

இதை அறிந்த அவருடைய கணவர் Keating மனைவி Yiranயை தன்னுடைய டெஸ்லா காரில் அமர வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். துரதிஸ்டவசமாக அந்த நாளில் அந்த நேரத்தில் நகரத்தில் Trafficjam ஏற்பட்டுள்ளது இதனால் மருத்துவமனைக்கு செல்ல நேரமாகிவிட்டது.

பின்பு Keating தனது டெஸ்லா காரை Autopilot Modeஇல் போட்டுவிட்டார். Autopilot Mode என்பது தானாகவே கார் இயங்குவதாகும். அதை போட்டு விட்ட பின்னர் Keating தனது மனைவிக்கு ஆறுதலாகவும் சப்போட்டாகவும் இருந்துள்ளார்.

ஆச்சரியமாக அவர்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன் காரின் உள்ளே பெண் குழந்தை பிறந்துவிட்டது. இச்சம்பவம் அப்பகுதியை ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் ஆகியுள்ளது.

Maeve Lily என்று அந்தப் பெண் குழந்தைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. தாயும் குழந்தையும் நன்றாக உள்ளார்களாம். அந்த மருத்துவமனையில் உள்ள நர்சுகள் அந்தக் குழந்தைக்கு Tesla Baby என்று பெயர் கேலியாக வைத்துள்ளனர்.