Zero ரூபாய் நோட்டு பற்றி உங்களுக்கு தெரியுமா

*Zero ரூபாய்*

இந்தியாவில் Zero ரூபாய் நோட் புழக்கத்தில் உள்ளது இது பல பேருக்கு தெரியாத ஒன்றாகும். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்று பார்த்தால் இது இப்போது இருந்து அல்ல 2007 இல் இருந்து புழக்கத்தில் உள்ளது.

இந்த Zero நோட் உடைய வித்தியாசம் என்னவென்றால் பார்த்தாள் இதை RBI அச்சடிக்கவில்லை அதற்கு பதிலாக 5th Pillar என்கிற தமிழ்நாட்டை சான்ற NGO இதை அச்சடக்கின்றனர்.

இந்தியாவில் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதை இவர்கள் செய்கிறார்கள். லஞ்சத்தை கொடுக்கவோ வாங்கவோ மாட்டேன் என்று இந்த Zero ரூபாய் நோட்டில் அச்சடித்திருக்கும்.

உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் நீங்கள் லஞ்சத்திற்கு பதிலாக இந்த Zero நோட்டுகளை கொடுக்க வேண்டும் என்பதே இவர்களுடைய நோக்கமாக இருக்கிறது. லஞ்சம் வாங்குவது குற்றம் இதை ஒழிக்க வேண்டும் மக்கள் இதற்காக ஆதரிக்க வேண்டும் என்று இந்த அமைப்பு கூறுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் இந்த Zero நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு பொதுவிடங்களில் புழக்கத்தில் உள்ளது அதுமட்டுமில்லாமல் இதை ஆன்லைனிலும் வைத்திறுக்கிறார்கள் நீங்கள் இதை அச்சடித்துக் கொள்ளலாம்.

Leave a Comment