நல்லது பண்ண நல்லதே நடக்கும் | வலிமை அஜித் சம்பளம்?

*வலிமை*

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இந்நிலையில் தற்போது ஹச்.வினோத் இயக்கத்தில் தனது 60வது படமான வலிமை திரைப்படம் பொங்கல் அன்று வெளியாக உள்ளது.

ஹச்.வினோத் ஒரு சிறந்த இயக்குனர் இன்று அவருடைய படங்களை வைத்தே தெரிந்து கொள்ளலாம். தற்போது இவர் அஜீத் குமாரை வைத்து இயக்கியுள்ள “வலிமை” திரைப்படத்தை அஜீத் ரசிகர்களும் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.

வலிமை திரைப்படத்தில் அஜித்துடன் ஹுமா குரேசி, கார்த்திகேயா, யோகிபாபு மற்றும் பலர் என் படத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் முழுக்க முழுக்க பைக் ரேஸ் மற்றும் ஆக்க்ஷன் கலந்த திரைக்கதையாகும். இதுவரை இப்படத்தின் ஒரு நிமிட பார்வை மற்றும் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் வலிமை படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்குகியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வலிமை படத்திற்காக நடிகர் அஜித்குமார் சுமார் 70 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் கூறுகிறது ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை. சினிமா வட்டாரங்கள் இதைப்பற்றி பெருமளவு பேசிக்கொண்டு வருகின்றனர்.