இப்போதைக்கு தங்கம் வாங்காதீங்க ஏன்..!

*தங்கம் வாங்காதீங்க*

இந்தியாவில் தங்கத்திற்கு எப்போதும் பெரிய டிமாண்ட் உள்ளது. சுமார் ஆறு வருடத்தில் இல்லாத மோசமான நிலையை இந்த ஆண்டு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்ய இருந்தோர் மாற்று முதலீட்டுத் திட்டத்திற்குச் செல்ல முடிவு செய்து வருகின்றனர்.

இந்தியாவில் நடுத்தர மக்கள் பல கோடி பேர் தங்கத்தை தான் மிகப்பெரிய முதலீடாக கருதி வருகின்றனர். இந்த நிலையில் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள 6 வருட சரிவு மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை 2021ன் கடைசி நாளாகவும் வாரத்தின் கடைசி நாளாகும் இருந்த நிலையில் MCX வர்த்தகச் சந்தை முடிவில் 10 கிராம் தங்கத்தின் விலை 198 ரூபாய் வரையில் உயர்ந்து 48,083 ரூபாயாக உயர்ந்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் தங்கத்தின் உச்ச விலை 56,200 ரூபாயை ஒப்பிடுகையில் சுமார் 8000 ரூபாய் குறைவாக உள்ளது. 2021 ஆம் ஆண்டில் மட்டும் சும்மா 4% சரிவு பதிவு செய்து முதலீட்டாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை தனது உச்ச விலையிலிருந்து 8000 ரூபாய் குறைவாக இருப்பதால் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1800 டாலருக்கும் குறைவாக இருக்கும் வேலையிலும் தங்கம் வாங்குவதற்கு டிமாண்ட் குறைவாகவே உள்ளது என சந்தை நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அடுத்த மூன்று மாதத்தில் தங்கம் விலை 1800 டாலரில் இருந்து 1900 டாலர் வரையில் உயரும் எனக் கணிக்கப்படுகிறது. அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயரும் காரணத்தினாலும், உலக நாடுகள் தங்களது முதலீட்டை தங்கம் மீது திருப்ப வாய்ப்புள்ளதால் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளது.