கொரோனா வராமல் இதை செய்யுங்கள் CM வேண்டுகோள்..?

*கொரோனா*

15 வயது முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பேசிய முக ஸ்டாலின் “திமுக ஆட்சியின் தீவிர நடவடிக்கையால் கொரோனா இரண்டாவது அலையின் வீரியம் குறைந்தது. கொரோனாவைத் தடுக்கும் கேடயம் முக கவசம் தான் என்பதால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசத்தை அணிவதுடன் சமூக இடைவேளை உள்ளிட்ட அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். உயிர் காக்கும் தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும்”.

விரைவில் தொற்று இல்லாத மாநிலமாக தமிழ்நாடு என்ற பெயரை பெர அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று கூறினார்.

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதை அரசு இயக்கமாகவே மாற்றி இருப்பதாக குறிப்பிட்ட அவர் இந்த இயக்கத்தில் மக்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார். அதனைத்தொடர்ந்து சிறார்களுக்கு தடுப்பூசி சேலுத்தும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.