பக்கெட் Shawarma பத்தி உங்களுக்கு தெரியுமா..?

*பக்கெட் Shawarma*

Shawarma என்பது பிரபலமான Levantine அரபு உணவாகும். இறைச்சி மெல்லிய துண்டுகளாக வெட்டப்பட்டு அதை ஒரு ரோட்டிக்குல்(குப்பூஸ்) வைத்து Mayonnaise தடவி சுருட்டி கொடுக்கப்படும் உணவுதான் ஷவர்மா.

பொதுவாக அனைத்து நாடுகளிலும் ஷவர்மா பிரபலமான ஒரு உணவு தான். அனைத்து காடுகளிலும் மேலே குறிப்பிட்டுள்ளபடி தான் ஷவர்மா இருக்கும் ஆனால் இறைச்சிகள் அவரவர் விருப்பப்படி வைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். எல்லாவிதமான இறைச்சிகளையும் ஷவர்மாவில் வைத்து சாப்பிடுவது வழக்கம்.

தமிழ் நாட்டில் பெரும்பாலும் சிக்கன் வைத்துதான் ஷவர்மாவை சாப்பிடுவார்கள். தமிழ்நாட்டிலும் தற்போது பிரபலமான உணவாகவும் ஷவர்மா வலம் வருகிறது.

தமிழ்நாட்டில் பக்கெட் ஷவர்மா என்று புதிதாக ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள Dessert Shawarma என்ற கடையில் பக்கெட் ஷவர்மா என்று அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறார்கள்.

ஒரு சின்ன பக்கெட்டை எடுத்து அதில் குப்பூஸ் இல்லாமல் ஷவர்மாவை நிரப்பி விடுகிறார்கள் அதன்பின் அதில் மேல் தேவையான குப்பூஸ்களை வைத்துவிடுகிறார்கள். இதை நீங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று குடும்பத்துடன் சாப்பிடலாம் அந்த அளவிற்கு அதன் Quantity இருக்கும்.

பக்கெட் ஷவர்மா மட்டுமில்லாமல் Mug ஷவர்மா என்ற ஒன்றும் விற்பனை ஆகிய வருகிறது. Mugகிற்குள் ஷவர்மா மற்றும் Cheese வைத்து தருகின்றனர்.