நடிகர் சமுத்திரக்கனியின் மகன் பற்றி உங்களுக்கு தெரியுமா..!

*சமுத்திரக்கனியின் மகன்*

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சமுத்திரக்கனி. பிறகு நடக்கவும் ஆரம்பித்தார் தற்போது முன்னணி நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தற்போது நடித்து வருகிறார்கள்.

சில படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் மற்றும் சில படங்களில் துணை கதாபாத்திரமாகவும் நடித்து வருகிறார்.

தற்போது சமுத்திரக்கனியின் மகன் ஹரி விக்னேஷ்வரனும் கிரியேட்டிவ் நாட்டம் கொண்டவர், கதாநாயகனாக நடித்து குறும்படத்தை இயக்கியுள்ளார். சமுத்திரக்கனி மற்றும் ஹரி விக்னேஷ்வரனின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் அவர் விரைவில் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.