ஜெய்பீம் இல் சுபத்ரா ராபர்ட் யார் தெரியுமா..?

*சுபத்ரா ராபர்ட்*

ஜெய்பீம் திரைப்படத்தில் ராஜா கிளியின் அக்கா வேடத்தில் துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் சுபத்ரா ராபர்ட்.

சுபத்ரா ராபர்ட் சிறுவயதிலிருந்தே பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்தார். அவருடைய கணவர் பெயர் ராபர்ட். சுபத்ரா பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த பொழுது திருமணம் செய்து கொண்டார் சுபத்திரா விற்கு ஒரு குழந்தையும் உண்டு.

சுபத்ரா ஒரு செவிலியராக பணியாற்றியுள்ளார். பின்னர் பிரான்சில் இருந்தது போதும் இந்தியாவை சுத்தி பார்ப்போம். ரூம் இந்தியாவை ரசிக்கலாம் என்று இங்கு ஒரு சுற்றுலாப் பயணியாக வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் ஒரு என் ஜீ ஓ குழுவுடன் இணைந்து ஒரு சமூக செவிலியர் ஆகவும் பணியாற்றியுள்ளார்.

அதன்பிறகு இவர் துணை இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். அப்படி இவர் துணை இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருந்தபோது ஒரு பிரெஞ்சு திரைப்படத்திற்காக பாண்டிச்சேரியில் படப்பிடிப்பிற்காக வந்துள்ளார். அப்போது இவர் ஒரு கவுண்டர் கொடுப்பது போல் ஒரு வசனத்தை பேசியுள்ளார் அதனை கண்ட இயக்குனர் நீங்கள் நன்றாக பேசுகிறீர்கள் நீங்கள் ஏன் நடிப்பதற்கு பயிற்சி பெற கூடாது என்று கூறியுள்ளார் அதுவே சுபத்ராவின் திரை வாழ்க்கையை தொடங்க முதள் புள்ளியாக அமைந்தது.

பின்னர் அந்த இயக்குனரின் பேச்சைக்கேட்டு பிரண்ட்ஸ் நாட்டிற்கு தொடர்பு உடைய ஒரு நாடகக்குழுவில் சேர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார். அப்படி அவர் அந்த நாடகக் குழுவில் இணைந்து பணியாற்றி வந்த பொழுது அவருக்கு பா ரஞ்சித் தொடர்பு கிடைத்துள்ளது. அவரும் இவருடைய நடிப்பை கண்டு வியந்து இவரை கண்டிப்பாக தனது திரைப்படத்தின் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்து உள்ளார்.

பின்னர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர்ஸ்டார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த கபாலி திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சுபத்ரா நடித்தார். அதன்பின்னர் வெற்றிமாறன் மாரிசெல்வராஜ் போன்ற பல முன்னணி இயக்குனர்களுடனும் பணியாற்றினார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழின் தலை சிறந்த நடிகர் என்று கருதப்படும் தனுஷ் உடன் இவர் நான்கு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு மிகவும் தேர்ந்தெடுத்து நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த சுபத்ராவுக்கு ஜெய் பீமிலும் மேலும் வாய்ப்பு கிடைத்தது. ஜெய்பீம் வெற்றிக்குப்பின் அவர் ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் பேசியபொழுது நான் ஜெய்பீம் திரைப்படத்தில் மிகவும் எளிமையாக நடித்துவிட்டேன் ஏனென்றால் நான் ஒரு நாடக கலைஞர் என்பதனால் எனக்கு திரைப்படங்களில் நடிப்பது எளிது ஆனால் அதற்கு டப்பிங் செய்வது எனக்கு கடினம் என்று கூறியுள்ளார்.

மற்றும் ஜெய்பீம் படத்தின் கதையை கேட்டபின் நான் கண்கலங்கி விட்டேன் இந்தத் திரைப்படத்தில் எனது முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணினேன் அதற்கு என் கணவரும் எனக்கு உறுதுணையாக இருந்தார் என்று கூறியுள்ளார்.

ஜெய்பீம் திரைப்படங்களின் இயக்கத்தின்போது சுபத்திராவின் கணவர் ராபர்டும் படப்பிடிப்பு காலங்களின் அவருடன் இருந்தார். இதுபோல் சவாலான வேடங்களில் நான் நடிக்க விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.