அனிருத் உருவான கதை தெரியுமா..?

*அனிருத் ரவிச்சந்தர்*

அனிருத் ரவிச்சந்தர் ஒரு இந்திய இசையமைப்பாளர். கோலிவுட் துறையில் பிரபலமான பின்னணி பாடகர்கள் மற்றும் பிரபலங்களில் இவரும் ஒருவர்.

இவர் 1990 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தார்அனிருத்தின் தந்தை ஒரு பழைய நடிகர், அவர் பெயர் ரவி ராகவேந்திரா மற்றும் அவரது தாயார் ஒரு கிளாசிக்கல் டான்சர் அவரது பெயர் லக்ஷ்மி ராகவேந்திரா.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த திரைப்படம் 3இல் அவர் முதல் முதலாக இசையமைத்தார். இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மற்றும் ஒய் திஸ் கொலவெறி டி பாடல் உலக அளவில் ஹிட் ஆனது.

தனது முதல் படத்திலேயே பல தீவிர ரசிகர்களை பெற்றார். மேலும் பல ட்ரெண்ட் செட்டிங் பாடல்களுடன் நவீன கால இசையமைப்பாளராக ஜொலிக்கிறார்.

*அனிருத் ரவிச்சந்திரன் சாதனை பயணத்தின் முதல் அடி*

அனிருத் ரவிச்சந்தர் சிறுவயதிலிருந்தே இசையமைப்பில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்துவந்தார் அதனால் அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் சவுண்ட் டிசைனிங் படிப்பை படித்து முடித்தார் அவர் படித்து முடித்த உடனேயே அவருக்கு தனுஷ் மற்றும் சுருதிஹாசன் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்த 3 படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது அவர் அந்த திரைப்படத்திற்காக தனது முழு திறமையையும் வெளிப்படுத்துவதற்காக அயராது பணியாற்றினார்.

அத்திரைப்படத்தின் இசையமைப்பு காலங்களில் அனிருத் வீட்டிற்கே ஒழுங்காக வர மாட்டார் என்று அவரது தாயார் குறிப்பிடுகிறார். மேலும் அவர் ஒரு நிகழ்வை குறிப்பிடுகையில் ஒரு நாள் நள்ளிரவு வரை அனிருத் வீட்டிற்கு திரும்பவில்லை அதனால் என்னவென்று காணலாம் என்று அவரது ஸ்டுடியோவிருக்கு சென்றபோது அவர் கீபோர்டு கருவியின் பையை எடுத்து போற்றிக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தார்.

இவ்வளவு கடினமாக உழைத்து 3 திரைப்படத்திற்கு இசை அமைத்தார் அனிருத் ஆனால் திரைப்பட பாடல்கள் வெளியான காலத்தில் இதெல்லாம் ஒரு பாட்டா இன்று பலரும் அனிருத்தை கேலி செய்தனர் ஆனால் சிறிது காலங்கள் சென்றபின்னர் அத்திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த வை திஸ் கொலவெறி டி பாடல் யூட்யூப் என்றால் என்னவென்றே தெரியாத காலத்தில் சுமார் 10 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை இழுத்தது அப்பாடல்.

தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளாவிய ரசிகர்களும் அவரை வரவேற்று கொண்டாடினர். இதனைப் பற்றி அனிருத் ஒரு நேர்காணலில் குறிப்பிடுகையில் என்னை பலரும் மூன்று திரைப்படப் பாடல்களுக்கு கேலி செய்தனர் ஆனால் அப்பாடல்கள் வெற்றி பெற்ற பின்னர் அவர்கள் வாயடைத்து விட்டனர் அதனால் உங்களுக்கு பிடித்ததை உங்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் தைரியமாக அதனை செய்யுங்கள் அது உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று குறிப்பிட்டார்.

முன்னொரு காலத்தில் இதெல்லாம் ஒரு பாடலா என்று அனிருத்தை கிண்டல் செய்தனர் ஆனால் இப்பொழுது அனிருத்தின் இசை அமைப்பிற்காக பல தயாரிப்பாளர்களும் காத்துக் கிடக்கின்றனர். முன்னணி நடிகர்களான விஜய் அஜித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் போன்றவர்களின் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். பல விருதுகளையும் தன் வசம் வைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அனிருத் இசையமைத்தால் அத் திரைப்பட பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெறும் மற்றும் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை திரைப்படத்தின் மேல் தூண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது இத்தகைய பெரிய வளர்ச்சி அடைந்துள்ள அனிருத் ரவிச்சந்தர்