ராமராஜன் உருவான கதை பற்றி தெரியுமா..?

*தன்வசம் வைத்திருந்த ராமராஜன்*

ராமராஜன் மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை ஒரு நாடக கலைஞர் ஆவார். இவர் சிறியவனாக இருந்த காலத்திலேயே இவர் எம்ஜிஆரை நேரில் காண வேண்டும் என்ற ஆசை உடையவராக இருந்து வந்தார். பின்னர் இவர் ஒரு திரையரங்கில் பணிபுரிய தொடங்கினார்.

முதலில் அது அங்கு சுத்தம் செய்யும் பணிகளை செய்து வந்தார் பின்னர் டிக்கெட் கவுண்டர்களில் வேலை செய்யும் பணி அவருக்கு கிடைத்தது. அப்போது எம்ஜிஆர் மற்றும் சிவாஜி திரைப்படங்கள் வெளியாகும் காலங்களில் மக்கள் கூட்டம் நிறைய வருவதில்லை கண்டு அவரும் எப்படியாவது திரைத்துறையில் ஒரு நாயகனாக வலம் வந்து தனக்கும் இவ்வளவு ரசிகர்கள் தன் திரைப்படத்தை காண வரவேண்டும் என்று குறிக்கோளை வைத்தே வாழ்க்கையை நகர்த்தத் தொடங்கினார்.

பின்னர் சென்னைக்கு பலபல திரைத்துறை கணவனுடன் வரும் இளைஞர்கள் போலவே இவரும் வந்தார். முதலில் தயாரிப்பு ஊழியராக சென்னையில் பணிபுரிய தொடங்கினார். தயாரிப்பு ஊழியர் என்றால் அந்த திரைப்பட படப்பிடிப்பின் போது அங்கு இருக்கும் அனைத்து வேலைகளையும் செய்யும் ஊழியர் பணியே ஆகும். அதனை முழுமனதுடன் செய்து அங்கு இருக்கும் பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.

படிப்படியாக தயாரிப்பு ஊழியர் பணியிலிருந்து படப்பிடிப்பு செலவுகளை திட்டமிடுபவர்கள் பணிக்கு முன்னேறினார். அதன் பின்னர் இவர் நன்கு வேலை செய்வதனை கண்டு இவரை துணை இயக்குனராகவும் பல இயக்குனர்கள் இவரை வைத்துக் கொண்டனர்.

அதன் பின்னர் இவரே ஒரு இயக்குனராக மாறி சில படங்களை எடுத்தும் சில படங்களிலும் நடித்தும் வந்தார். இவர் முதன்முதலில் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் ஒரு சுமாரான வெற்றி பெற்றன. நகர்ப்புறங்களில் அல்லாமல் ஊர்ப்புறங்களில் மற்றும் கிராமங்களில் இவரது திரைப்படங்கள் அனைத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தன.

ஏனென்றால் இவரது திரைப்படங்கள் அனைத்தும் கிராமிய வாழ்க்கையை நன்கு காண்பிப்பதாக இருந்தன அது மட்டுமல்லாமல் அவர்களது வாழ்க்கையுடன் தொடர்பு வைக்க கூடிய அளவிற்கு அவரது நடிப்பு இருந்தது.

இப்படியே அவரது திரைப்படங்கள் அனைத்தும் ஒரு தோல்வி படமும் அல்லாமல் வெற்றிபெறவும் அல்லாமல் ஆக இருந்து வந்த காலத்தில் கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடிப்பில் வெளிவந்த கரகாட்டகாரன் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது இத்திரைப்படம் சில திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கும் மேல் ஓடியது.

இத்திரைப்படம் வெளிவந்து கரகம் கலையை உயர்த்திய தாகவும் கூறப்படுகிறது. அவ்வளவு பெரிய வெற்றி அடைந்தது திரைப்படம். கரகாட்டக்காரன் திரைப்படத்திற்குப் பின்னர் ராமராஜன் நடித்த அனைத்து திரைப்படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. கிராமப்புறங்களில் ராமராஜனுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்துவந்தது. அதன்பின்னர் இவருக்கு வயது ஆகிவிட்டது.

ஆனாலும் இவர் நான் நடித்தால் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் அதனால் நான் மற்றப் வேடங்களில் நடிக்க விரும்பவில்லை என்று சாதாரண வாழ்க்கைக்கு திரும்பினார். இவரது இத்தகைய செயல் பலருக்கும் புதிதாக அமைந்தது ஏனென்றால் ஒருவர் ஒரு உயரத்தை அடைந்த பின்னர் மென்மேலும் உயரம் அடைய வேண்டும்.

என்றே விரும்புவர் ஆனால் நான் நினைத்தது நான் முடித்து விட்டேன் நான் ஆசைப்பட்டது திரைத்துறையில் கதாநாயகனாக வலம் வர வேண்டும் என்றது அதை நான் முழுமையாக நிறைவு செய்தேன் என்று தனது திரை பயணத்தை முடித்துக்கொண்டு இவர் ஒரு சாதாரண வாழ்க்கையை தற்பொழுது வாழ்ந்து வருகிறார்.

ஒரு சாதாரண திரையரங்கில் சுத்தம் செய்யும் பணியாளராக பணிபுரிந்து வந்து பின்னர் திரைத்துறையில் ஒரு தன்னிகரில்லா கதாநாயகனாக வலம்வந்த ராமராஜனின் வாழ்க்கை கதை நம்மை மிகவும் ஊக்கப்படுத்த கூடியதாக உள்ளது.