உணவை விமர்சனம் செய்வது எப்போது தொடங்கியது தெரியுமா..?

*எப்போது தொடங்கியது*

உணவை விரும்பி உண்ணும் உயிரினங்களில் மனித இனமே முதன்மையானவை. நாம் புதுமையான உணவுகளை உண்ண வேண்டும் என்று விரும்புவோம் ஆனால் அப்படி உண்ண முடியாத நிலையிலும் தேடித்தேடி புதுமையான உணவுகளை உண்டு அதனை ஒரு பதிவாக பதிவு போரின் வீடியோக்களை நாம் அதிகம் காண்போம். அதுபோல சமையல் நிகழ்ச்சிகளை எடுத்துக்கொண்டால் குக்கு வித் கோமாளி, மாஸ்டர் செப் போன்ற நிகழ்ச்சிகள் உணவின் சுவையை கருத்துக் கூறுவது போலவே அமைந்திருக்கும்.

இதேபோல் யுடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் உணவின் சுவையை கருத்துக் கூறுவது போல் அமைந்திருக்கும் அனைத்து பதிவுகளும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறுகின்றன. யூட்யூபில் மற்ற வீடியோக்களுகான வரவேற்பை போலவே உணவு சுவையின் கருத்தைக் கூறும் வீடியோ களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது மற்றும் அதிக பார்வையாளர்களை ஈர்க்கிறது. இந்த உணவின் கருத்துகளை வெளியிடுவது எப்போது தொடங்கியது என்றால் முதல் முதலில் எப்பொழுது உணவு விடுதிகள் தொடங்கியதோ அப்போது முதலே இதுவும் வழக்கத்தில் இருக்கின்றது.

கிபி எழுபத்தி ஒன்பதாம் நூற்றாண்டு எரிமலையின் வெடிப்பினால் அழிந்துபோன பாம்பே நகரத்தில் அகல் ஆய்வின் போது அறிவியலாளர்கள் உணவு விடுதிகள் இருப்பதனை கண்டுபிடித்துள்ளனர். அதேபோல் ஜெருசலம் நகரில் 1500 வருடம் பழமையான உணவு விடுதி ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். கிபி 705 ஜப்பானில் தொடங்கப்பட்ட ஒரு உணவு விடுதி இன்றளவிலும் 52 தலைமுறைகளாக அதனை பராமரித்து வருகின்றனர் அதுமட்டுமல்லாமல் அந்த விடுதி அதிக பழமையான உணவு விடுதி என்ற கின்னஸ் ரெக்கார்ட் ஆகும் தன் வசம் வைத்துள்ளது. இப்படி பல வருடத்திற்கு முன்னே உணவு விடுதிகள் தோன்றியதற்கு ஆதாரம் உள்ளது அதேபோல உணவு விடுதிகளில் உணவை உண்டுவிட்டு அதனை விமர்சிக்கும் பழக்கமும் நம்மிடையே இருந்தது.

உணவு விமர்சனத்தின் உதாரணமாக எடுத்துக்கொண்டால் கிமு 350ல் கவிஞர் ஆர்கஸ்ட்ரெடஷ் பழைய நகரமான டோராவனில் சாப்பாடு மிகவும் மோசமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இவரைப் போன்றே பல எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் அவர்கள் உண்ட உணவை வரலாற்றில் பல இடங்களில் விமர்சித்து உள்ளனர்.

அப்படி செய்ததிலேயே மிகவும் துல்லியமாக விமர்சனம் செய்தவர் 14ஆம் நூற்றாண்டின் ibn batuta மொரோக்கோவில் பிறந்து அங்கேயே இஸ்லாமிய சட்டத்திற்கு அதிபதியாக இருந்த இவர் ஒருநாள் திடீரென்று இந்த வாழ்க்கை எனக்கு போதும் நான் உலகத்தை சுற்றி உலகத்தை ரசிக்க போகின்றேன் என்று பெரும் பயணத்திற்கு சென்றார். அப்படி புறப்பட்ட அவர் சுமார் 40 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

அப்படி பயணம் சென்று ஒவ்வொரு நாட்டின் பழக்க வழக்கத்தையும் ஒரு பயணக் குறிப்பாக வெளியிட்டார். அதில் அவர் சாப்பிட்ட உணவுகளையும் பதிவிட்டு இருந்தார். அப்படி முதன்முதலில் ஒவ்வொரு நாட்டின் உணவையும் பதிவிட்டு இருந்ததுதான் இந்த உலகத்தின் முதல் முதலான உணவு விமர்சனம் ஆகும்.

இவரது தெளிவான விமர்சனங்கள் மூலம் ஒவ்வொரு நாட்டின் உணவு அப்போதைய வழக்கத்தையும் நாம் அறிந்துகொள்ள முடிந்தது. இவரைப்போலவே பால பயணிகளும் பயணம் மேற்கொள்வோர் உம் அவர்கள் அங்கு சுவைத்த உணவை விமர்சித்து உள்ளனர். ஆனால் இந்த விமர்சனங்கள் இப்போது இருப்பது போல ஒரு உணவு விடுதியின் விமர்சனம் போல அல்ல. உணவு விடுதிகளின் விமர்சனம் எப்போது தொடங்கியது என்றால் அது 1900 காலகட்டத்தில்தான்.

முதன்முதலில் உணவுவிடுதி களுக்கான விமர்சனம் பிரான்ஸில் Alrexandre balthazar laurent grimod de la ryniere என்பவர் Almond Gaurmand என்ற புத்தகத்தின் வாயிலாக அந்த ஆண்டின் உணவு விடுதிகளை பற்றி விமர்சித்து இருந்தார்.மிச்செலின் டயர் நிறுவனம் அதன் முதல் ஹோட்டல் மற்றும் உணவக வழிகாட்டியை 1900 இல் வெளியிட்டது (1926 பதிப்பில் அதன் முதல் விரும்பப்படும் “நட்சத்திரங்களை” வழங்கியது).

முரண்பாடாக, மிச்செலின் அதன் டயர்களை வாங்குபவர்களை அதிகமாக ஓட்டுவதற்கு ஊக்குவிப்பதற்காக உணவகத்தின் மதிப்புரைகளை ஆராய்ந்தது, இதன் மூலம் பிராண்ட் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது, ஆனால் டயர்களை அணிந்துகொள்வதன் மூலம் அவர்கள் அதிகமாக வாங்க வேண்டியிருக்கும்.டங்கன் ஹைன்ஸ் 1935 இல் அட்வென்ச்சர்ஸ் இன் குட் ஈட்டிங் மூலம் அமெரிக்காவில் இதைப் பின்பற்றினார் (அவர் மிகவும் பிரபலமானார், அவர் தனது பெயரை ஒரு வெகுஜன சந்தை உணவு நிறுவனத்திற்குக் கொடுத்தார்). இங்கிலாந்தில், ரேமண்ட் போஸ்ட்கேட் முதல் உணவுப் பயணப் புத்தகத்தை வெளியிட்டார் (1951 இல் நல்ல உணவு வழிகாட்டி).

19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியானது செய்தித்தாள்களுக்கான பொற்காலம்: பரவலாகப் படிக்கப்பட்ட, தினசரி, செய்திகளுக்கான விலையில்லா ஆதாரம், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு வதந்திகள், வாய் வார்த்தைகள், மற்றும் நகர அழுபவர்கள் மற்ற இடங்களிலிருந்து செய்திகளை ஒருவரின் ஊருக்குக் கொண்டு வருவதற்காகக் காத்திருந்தனர்.

தி நியூயார்க் டைம்ஸில் முதல் உணவக ஆய்வு 1859 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி ஹவ் வி டைன் என்ற தலைப்பில் வெளியானது. அதன் ஆசிரியர் அநாமதேயமாக இருக்க விரும்பினார், மேலும் “டைம்ஸின் வலுவான எண்ணம் கொண்ட நிருபர் மூலம் சென்றார். கட்டுரை மிகவும் நவீனமான முறையில் திறக்கிறது, ஆசிரியர் தனது ஆசிரியரின் வேலையை விவரிக்கிறார்: “இன்று வேறு எங்காவது மற்றும் நாளை வேறு எங்காவது சாப்பிடுங்கள். நீங்கள் எல்லா இடங்களிலும் சாப்பிட விரும்புகிறேன். ஆஸ்டர் ஹவுஸ் உணவகம் முதல் நகரத்தில் உள்ள சாப்பாட்டு அறையின் மிகச்சிறிய விளக்கம் வரை, இந்த எல்லா இடங்களின் கணக்கையும் நீங்கள் வழங்கலாம். காசாளர் உங்கள் செலவுகளை செலுத்துவார்.

இதனை வழிவழியாக பின்தொடர்ந்த மக்கள் இதுபோன்ற பல விமர்சனங்களையும் உணவை பற்றிய பல குறிப்புகளையும் புத்தகத்தின் வாயிலாகவும் இன்டர்நெட் வாயிலாகவும் தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது உணவு விமர்சனம் என்பது மக்களால் பெரிதும் அங்கீகரிக்கப்படுகிறது அதனை பலரும் விரும்பிப் காண்கின்றனர் உணவு விமர்சனம் ஒரு விடுதியின் ஏற்றத்திற்கும் தாழ்வுக்கும் காரணமாக அமைகிறது.

ஒரு உணவு விடுதியின் சாப்பாடு நன்றாக இருப்பதுபோல விமர்சனம் செய்வதன் மூலம் அந்த உணவு விடுதி மக்களிடையே நல்ல அங்கீகாரம் பெறுகிறது. தற்போது பலரும் உணவு விமர்சன யூடியூப் சேனல்கள் வைத்து நடத்தி வருகின்றனர். ஆனால் உணவு விமர்சனம் என்பது கிபி காலத்திலேயே தொடங்கி விட்டது என்பதனை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.