இவர் யார் தெரியுமா உங்களுக்கு..!

*சக்தி யோகி ராஜா*

தமிழ் சினிமாவில் உச்ச கட்ட நடிகர்களுடன் நடித்து தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. யோகி பாபு நிறைய கஷ்டங்கள் பட்டு தன்னுடைய உழைப்பால் இந்த உயரத்திற்கு வந்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தற்போது தெலுங்கு மலையாளம் துறையிலும் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இருக்கும் மேல்நகரம்பேடு என்னும் கிராமத்தில் பிறந்தவர் தான் யோகி பாபு. தற்போது அந்த கிராமத்தில் யோகி பாபு உடைய அண்ணன் சக்தி யோகி ராஜா கோவில் கட்டி ஆன்மிகத் தொண்டு செய்து வருகிறார்.

வராஹி அம்மனின் தீவிர பக்தராக இருக்கிறார் சக்தி யோகி ராஜா. வராஹிகாக இங்கு ஆலயம் அமைத்து இறைத் தொண்டு செய்து வருகிறார். விநாயகர், பெரியாண்டவர், காளியம்மன், அங்காளபரமேஸ்வரி போன்ற தெய்வங்களுக்கும் அங்கு வழிபாடு நடத்தப்படுகிறது.

வாரந்தோறும் ஞாயிறு செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களிலும் பௌர்ணமி அமாவாசை ஆகிய நாட்களிலும் கோவில் வளாகத்திலேயே அருள்வாக்கு சொல்லி வருகிறார் சக்தி யோகி ராஜா.

கத்தி யோகி ராஜாவை Archives of Hindustan என்னும் யூடியூப் சேனல் அங்கு சென்று அவரைப் பேட்டி எடுத்துள்ளார்கள். அவர் தனது வாழ்க்கை பற்றி கேட்காமல் ஆன்மீகத்தைப் பற்றிக் மட்டும் கேட்குமாறு கூறினார்.

அந்தப் பேட்டியில் இவர் எங்கள் பரம்பரையே ஆன்மீகத்தை பின் பற்றியவர்கள் தான் என்று கூறினார். அதே வழியில் நானும் இருக்கிறேன் என்றார். 20 வருடங்களாக ஆன்மிகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன் அதற்கு முன் டிராவல்ஸ் வைத்திருந்தேன் என்றார்.

எங்கள் தாத்தா காலத்தில் நாங்கள் நாடக கம்பெனி வைத்து நடத்தி வந்தோம் என்றும் குறிப்பிட்டார். சக்தி யோகி ராஜா பேட்டி அளித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.