இந்திய ஏன் Cryptocurrency-க்கு பயபிடுகிறது தெரியுமா..?

*Cryptocurrency*

உலக அளவில் Cryptocurrencyஐ பெருமளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். Cryptocurrencyயில் லாபம் நஷ்டம் இரண்டும் உள்ளன. இதை கவனமாக படித்து அந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவு உங்களுக்கு இருந்தால் நிச்சயமாக நீங்கள் இதில் லாபம் காணலாம்.

Cryptocurrencyஐ வல்லரசான பெரிய நாடுகளில் தான் அதிகம் பயன்படுத்துவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் அது இல்லை உலகத்தில் அதிகமாக Cryptocurrencyஐ பயன்படுத்தும் நாடு இந்தியா.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 100 மில்லியன் Users Cryptocurrency பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்தியாவில் Cryptocurrencyஐ தடை செய்யப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஆனால் இந்திய அரசாங்கம் Cryptocurrencyஐ முழுமையாக தடை செய்யப் போவதில்லை சில தனியார் Cryptocurrency நிறுவனங்களை தான் தடை செய்யப் போகிறார்கள் ஏனென்றால் Cryptocurrencyஐ ஒழுங்கு படுத்துவதற்காக என்று கூறப்படுகிறது.

எதுக்காக ஒழுங்கு படுத்துகிறார்கள் என்று பார்த்தால், சில பணம் மோசடிகள் இதன்மூலம் செய்கிறார்கள், தீவிரவாத அமைப்புகள் இதன் மூலம் நிதிகளை வாங்குகிறார்கள், வரி செலுத்தாமல் இருப்பது போன்றவற்றிற்காக.