எங்க கிட்ட மோதாதிங்க வேற மாறி ஆகிரும் தல ரசிகர்கள்..!

*தல ரசிகர்கள்*

வரும் 2022ஆம் ஆண்டு பொங்கல் அன்று மிக பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகவுள்ளது வலிமை திரைப்படம். நடிகர் அஜித் குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்காக அஜித் ரசிகர்கள் சுமார் இரண்டு வருடங்களாக காத்திருக்கின்றனர்.

தற்போது வலிமை திரைப்படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டு வருகிறது. சமீபத்தில் படத்தின் Glimpse மற்றும் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. படம் வெளியாவதற்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் இப்படத்தின் ட்ரைலரை வெளியிட வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வலிமை திரைப்படத்திற்கு போட்டியாக பாகுபலி திரைப்படத்தின் இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் RRR திரைப்படம் வரும் ஜனவரி 7-ம் தேதி வெளியாக உள்ளது. RRR திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 450கோடி ஆகும். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி கன்னடம் போன்ற 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

தற்போது வலிமை படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இதையொட்டி RRR திரைப்படம் வெளியாகும் நிலையில் அஜித் ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். மதுரையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதத்தில் போஸ்டர் அடித்து ஒட்டி விட்டார்கள்.

அதில் RRR உங்கள் ஆட்டம் இப்போது முடியப்போகிறது என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர். தற்போது இந்த போஸ்டர் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.