பில் கேட்ஸ் ஐ விட அதிக சொத்து மதிப்பு எலோன் மஸ்க்..!

*பில் கேட்ஸ் எலோன் மஸ்க்*

எலோன் மஸ்க் வெறும் 11 மாதங்களில் பில் கேட்ஸின் மொத்த சொத்து மதிப்பை விட அதிகமாக சம்பாதித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் பிறந்து இன்றைய காலத்து இளைஞர்களுக்கு ஒரு ரோல்மாடலாக விளங்கும் நபர் தான் எலோன் மஸ்க். இவர்தான் அந்த டெஸ்லா பங்குகளின் மதிப்பு பெருகியதால் $300 பில்லியனுக்கு மேல் சொத்து மதிப்பை பெற்ற ஒரே நபராக இருக்கிறார். 2021ல் எலோன் மஸ்க் பில் கேட்ஸின் வருட சொத்து மதிப்பான $135 பில்லியனை விட $6 பில்லியன் அதிகம் பெற்று வருட சோத்து மதிப்பாக $141 பில்லியனுடன் உள்ளார்.

தற்போது எலோன் மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு $311 பில்லியன். இது 4.4 பில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் அல்லது $174 மில்லியன் Troy Ouncesக்கு சமம்.

நிறுவனத்தின் காலாண்டு இறுதி விற்பனை இலக்குகளை அடைய கடைசி நிமிடத்தில் ஆர்டர்களை அவசரபடுத்துவதை விட செலவுகளை குறைக்குமாறு ஊழியர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் எலோன் மஸ்க் “விரைவு கட்டணம், கூடுதல் நேரம் மற்றும் தற்காலிக ஒப்பந்ததாரர்களுக்கு 4ஆம் ஆண்டு இறுதிக்குள் கார்கள் வந்து சேரும் என்பதற்காக நிறுவனம் அதிகம் செலவழிக்க விரும்பவில்லை” என்று வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்ட ஒரு குறிப்பில் எழுதினார்.