ஆப்பிரிக்கா நாட்டின் எலோன் மஸ்க்..?

*எலோன் மஸ்க்*

நம்மால் முடியும் என்று நினைத்து ஒரு விஷயத்தை பண்ணும் நபர்களுக்கு கண்டிப்பாக ஒருநாள் அதற்கான பலன் கிடைத்தே தீரும்” என்பதற்கு ஒரு உதாரணம் இந்த சிறுவன்.

ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள கானா என்னும் பகுதியில் ரொம்பவே ஏழ்மையான குடும்பத்தில் வாழ்ந்து வருபவர் தான் கில்வின் என்பவர்.

கில்வின் தனது சிறு வயதில் இருந்தே ஒரு இன்ஜினியர் ஆக வேண்டும் என்று பெரிய கனவுகளுடன் இருந்துள்ளார் ஆனால் சில கஷ்டத்தினால் அவரது படிப்பை தொடர முடியவில்லை.

இருந்தாலும் கில்வின் தனது இலட்சியத்தை விட்டுக்கொடுக்கவில்லை. தன்னுடைய பத்து வயதில் இருந்தே ரோபோ, டாய் ஏரோப்ளேன், வேக்கம் கிளீனர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை அவரே உருவாக்கியுள்ளார்.

இதை எல்லாத்தையும் தனியாகவே யோசித்து உருவாக்கியவருக்கு ஒரு யோசனை ஏற்படுகிறது. நாம் ஏன் ஒரு கார் உருவாக்கக் கூடாது என்று?.

காரை உருவாக்குவதற்காக முயற்சிகளை எடுக்கிறார். இதற்காக 4 வருடம் கார் மெக்கானிக்காக வேலை செய்கிறார்.

இந்த நான்கு வருடம் அவர் முழுமையாக கார் உருவாக்குவதை கற்றுக்கொண்டு அதற்குத் தேவையான பொருள்களை சில இடங்களில் எடுத்துக்கொள்கிறார்.

இறுதியில் அந்த பொருட்கள் எல்லாத்தையும் வைத்து அவர் நினைத்த மாதிரி ஒரு வித்தியாசமான காரை உருவாக்கினார். அவர் உருவாக்கிய கார் நன்றாகவே பயன்பட்டது.

இதனால் கில்வினை அங்குள்ள மக்கள் பாராட்டினர். அதுமட்டுமில்லாமல் கில்வினை இன்னோரு எலோன் மஸ்க் என்றும் அழைத்தனர்.

இப்படி ஒரு வித்தியாசமான காரை உருவாக்கிய கில்வினுடைய வயது வெறும் 18 தான்.

அதுவும் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து எந்தப் பண வசதியும் இல்லாமல் யாருடைய உதவியும் இல்லாமல் தன்னுடைய தன்னம்பிக்கையால் மட்டுமே ஒரு புது காரை உருவாக்கியுள்ளார்.