எதற்கும் துணிந்தவன் பட்ஜெட்

*எதற்கும் துணிந்தவன்*

நடிப்பின் நாயகன் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன், இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

மேலும் இப்படத்தில் பிரியங்கா மோகன், வினே ராய், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, வேல ராமமூர்த்தி, சிபி புவன சந்திரன், தேவதர்ஷினி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், சுப்பு பஞ்சு, சரன் சக்தி, ரெடின் கிங்ஸ்லி, டைகர் தங்கதுரை, புகழ், மதுசுதன் ராவ் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசை அமைத்துள்ளார்.

எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 10ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இது நடிகர் சூர்யாவின் திரையரங்குகளில் வெளியாகும் முதல் Pan-India திரைப்படமாகும், அவரது முந்தைய படங்களான சூரரைப்போற்று மற்றும் ஜெய் பீம் வெளியீடுகள் அமேசான் பிரைம் வீடியோவில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.

*எதற்கும் துணிந்தவன் பட்ஜெட்*

சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் சுமார் 75 கோடி மதிப்பில் தயாரித்துள்ளது, மேலும் உலக அளவில் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.