புனித் ராஜ்குமார் மரணத்தால் ரசிகர் தற்கொலை.

*ரசிகர் தற்கொலை*

புனித் ராஜ்குமார் மரணத்தால் ரசிகர் தற்கொலை மற்றும் இருவர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.

கடந்த அக்டோபர் 29ஆம் தேதி தனது நாற்பத்தி ஆறாவது வயதில் கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணம் அடைந்தது இந்திய திரை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனையடுத்து புனித் குமாரின் ரசிகர் கர்நாடகாவை சேர்ந்த 30 வயதான முனியப்பா புனித் குமாரின் மரண செய்தி அறிந்து அதிர்ச்சியில் மாரடைப்பால் இறந்தார்.

முனியப்பா புனித் குமாரின் உடல்நிலை செய்தியை தொலைக்காட்சி முன் கண்கலங்கி பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. புனித் குமார் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்ததும் திடீரென முனியப்பா வுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அங்கேயே சுருண்டு விழுந்தார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது.

புனித்தின் மற்றொரு ரசிகரான பரசுராதே மன்னன் அவர் புனித்குமாரின் மரணம் செய்தி கேட்டு மாரடைப்பால் இறந்துள்ளார்.

புனித் குமாரின் மற்றொரு ரசிகரான ராகுல் காடி வர்த்தரா புனிதத்தின் மரண செய்தி கேட்டு புனிதத்தின் படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு தூக்கு போட்டு கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் புனித் குமாரின் பல ரசிகர்கள் கவலையில் மூழ்கி உள்ளனர்.

புனித் குமார் இறந்த பிறகு அவருடைய கண்கள் உடனடியாக தியானம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.