மனைவி போட்டோவை பேஸ்புக்கில் ஷேர் செய்பவர்கள் கவனத்திற்கு…?

*போட்டோவை பேஸ்புக்கில் ஷேர் செய்பவர்கள் கவனத்திற்கு*

சமூக வலைதளங்களில் பெண்கள் அவங்களுடைய போட்டோவை பதி விடாதீர்கள் என்றும் யாரும் ஆபாச இணையதளத்தை பார்க்க வேண்டாம் என்றும் சைபர் கிரைமும் அரசாங்கமும் சொன்னாலும் நம்மில் பாதிப்பேர் அதைக் கேட்பதே இல்லை இதனால் என்ன பிரச்சனை வரப்போகிறது என்று அசால்டாக உள்ளார்கள்.

ஆனால் தற்போது இந்த விஷயத்தால் கரூரில் ஒரு குடும்பமே சின்னாபின்னம் ஆகி இருக்கிறது.

அந்த குடும்பம் யார்? யார் இப்படி செய்தது? அவர்களிடமிருந்து நாம் எப்படி தப்பித்துக் கொள்வது? என்பதைப் பார்ப்போம்.

கரூரில் hi-fi குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் சைபர் கிரைம்யிடம் ஒரு புகார் அளித்துள்ளார். அதைப்பற்றி அந்தப் பெண்ணிடம் கேட்டபோது அந்தப் பெண் அதை மறுத்துள்ளார். இதைப்பற்றி அங்கிருக்கும் போலீசாரிடம் கேட்டபோது உண்மை தெரிந்தது.

அந்தப் பெண்ணின் கணவர் ஒரு ஆடிட்டர் அவர் அடிக்கடி ஆபாச இணையதளத்தை பார்ப்பவர். அந்த ஆபாச இணையதளத்தில் பெண்களின் போட்டோக்களை போட்டு அதற்கு கீழே போன் நம்பர்கள் எழுதி இருக்கும் ஆர்வத்தில் அந்த கணவர் அந்த நம்பருக்கு கால் செய்துள்ளார்.

போனை அட்டன்ட் செய்தது பொள்ளாச்சியை சேர்ந்த அஜித் மற்றும் பிரசாந்த் என்கிற இரண்டு பேர்தான். இவர்கள் 2 பேரும் அந்த ஆடிட்டரின் ரகசியங்கள் மற்றும் அனைத்து தகவல்களையும் கேட்டுள்ளனர். ஆடிட்டர் எந்த நிலையில் இருந்தார் என்பது தெரியவில்லை அவருடைய எல்லா ரகசியங்களையும் அவர்கள் இரண்டு பேரிடம் பகிர்ந்துள்ளார்.

அடுத்த நாள் காலையில் அவர்கள் 2 பேரும் அந்த ஆடிட்டரின் பேஸ்புக்கில் நுழைந்து அவரின் மனைவியின் புகைப்படத்தை திருடி உள்ளனர்.

சில நாள் கழித்து இந்த ஆடிட்டர் ஆபாச இணையதளத்தை பார்த்திருக்கிறார். அதில் ஒரு பெண்ணின் நிர்வாணமான போட்டோ போட்டு அதற்கு இந்த ஆடிட்டரின் நம்பர் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆடிட்டரின் நம்பர் அப்லோட் செய்த அடுத்த நிமிடத்தில் ஆடிட்டருக்கு நிறைய கால் வந்துள்ளது. கால் செய்த நபர்கள் அந்த போட்டோவிற்க்கு கீழ் இந்த நம்பர் இருந்ததால் கால் செய்தோம் நாங்கள் இங்கு வர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

இதனால் பயம் அடைந்த ஆடிட்டர் அஜித் குமாருக்கும் பிரசாந்துக்கும் கால் பண்ணி அழுதிருக்கிறார். அதற்கு அவர்கள் ஆடிட்டரிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் ஆடிட்டர் தன்னிடமிருந்த 49 ஆயிரத்து அவர்களுக்கு டிரான்ஸ்பர் செய்துள்ளார்.

மறுபடியும் அந்தக் குழு அடுத்த நாள் கால் செய்து இதை பார் உன் மனைவியின் போட்டோவை நாங்கள் ஃபேஸ்புக்கிலிருந்து எடுத்துள்ளோம் உன் மனைவியை ஒரு ப்ரோஸ்ட்டிடூட் என்று சொல்லி ஆபாச இணையதளத்தில் அப்லோட் செய்திடுவோம் அப்படி பண்ணாம இருக்கணும்னா நீ எனக்கு 5 லட்ச ரூபா தரணும் என்று மிரட்டியுள்ளனர்.

இந்த விஷயத்தால் ஆடிப்போன ஆடிட்டர் தன் மனைவியிடம் இந்த விஷயத்தை கூறினார். அவருடைய மனைவி குடும்ப மானம் போனாலும் பரவாயில்லை அந்த கும்பலை போலீஸிடம் புகார் அளிக்க வேண்டும் என்று சைபர் கிரைம் இடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் புகார் அளித்த பிறகு சைபர் க்ரைம் அந்தக் குழுவை பிடித்துள்ளனர்.

இதைப்பற்றி கரூர் சப்-இன்ஸ்பெக்டர் சுதர்சன் கூறுவது “கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நாங்கள் 4 செல்போன்களை கைப்பற்றியுள்ளோம் அந்த செல்போன்களை விசாரித்து பார்க்கையில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட குடும்ப பெண்களின் ஆபாச போட்டோக்கள் இருந்தது. இந்த மாதிரி தவறுகள் அவர்கள் எப்படி பண்ணுகிறார்கள் என்றாள் அவர்கள் ஒரு செல்லாக வைத்திருக்கக்கூடிய லோகாண்டோ என்னும் ஆபாச இணையதளதை பார்த்து அவர்களுக்கு நிறைய பேர் போன் செய்கிறார்கள். அப்படி கால் செய்யும் போது அந்த ட்ரூகாலர்களை வச்சு இவர்கள் வசதியுடையவர்களா என்று ஆராய்ந்து அவர்கள் பேஸ்புக்கில் ரோல் செய்திருக்கும் பெண்களின் போட்டோக்களை திருடிவிட்டு மிரட்டுகிறார்கள். இதில் ஆண்கள் மட்டுமில்லாமல் சில பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்“.

இந்த சம்பவத்தால் பெண்கள் தங்களுடைய போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவு இடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.