OTT பார்வையாளர்களுக்கு நான்கு பெரிய விருந்து

*OTT பார்வையாளர்களுக்கு விருந்து*

வலிமை, பீமலா நாயக், ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம் மற்றும் 83 என்ன மொத்த 4 பெரிய படங்கள் இந்திய OTT பார்வையாளர்களுக்கு தயாராக உள்ளன. இந்த நான்கு படங்களும் நாட்டிலுள்ள நான்கு பெரிய மொழி பார்வையாளர்களுக்குப் பயன்படுகின்றன.

*பீமலா நாயக்*

ஆஹா வீடியோ மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்டிரீமிங் செய்யப்படுகிறது, தெலுங்கு நட்சத்திரம் பவன் கல்யாண் மற்றும் ராணா இணைந்து நடித்துள்ள ஆக்ஷன் திரைப்படமாகும்.

*வலிமை*

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் வலிமை, இப்படத்தில் தமிழ் முன்னணி நட்சத்திரம் அஜித்குமார் நடித்திருக்கிறார், இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். தமிழ்மொழியில் இப்படம் பெரும் வசூலை பெற்றது மற்றும் பிற மொழிகளிலும் நன்றாக வசூலித்தது.

*ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்*

கோவிட் 3வது அலையைத் தொடர்ந்து மிகப்பெரிய உலகளாவிய பாக்ஸ் ஆபீஸ் பிளாக்பஸ்டர் திரைப்படமாகும். இத்திரைப்படம் மார்வெல் யுனிவர்ஸ் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. ஏப்ரல் 12ஆம் தேதி முதல் படத்தின் 4K, HD, Blu-ray Printsகளை வெளியிட உள்ளனர்.

*83*

1983 இல் நடந்த கிரிக்கெட் வேர்ல்ட் கப்பில் இந்திய அணி எவ்வாறு வெற்றி பெற்றது என்ற வரலாறை கதைகளமாக கொண்டது. இதில் பாலிவுட்டின் பெரிய நட்சத்திரங்கள் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருக்கிறது.