கௌதம் அதானி முகேஷ் அம்பானியை மிஞ்சினார்..?

*கௌதம் அதானி முகேஷ் அம்பானியை*

கௌதம் அதானி அகமதாபாத்தைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான “அதானி குரூப்” நிறுவனரும் மற்றும் தலைவரும் ஆவார்.

கௌதம் அதானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியை பின்னுக்குத்தள்ளி ஆசியாவில் பெரும் மற்றும் பணக்கார் பட்டியலில் முதல் பணக்காரர் ஆனார்.

அறிக்கையின்படி அதானி நிறுவனத்தின் பங்குகள் அதானி போர்ட்ஸ் அதானியின் டோட்டல் கேஸ் மற்றும் அதானி கிரீன் உள்ளிட்ட பங்குகள் கடந்த சில மாதங்களாக உயர்ந்துள்ளது. முகேஷ் அம்பானியின் $14.3 பில்லியனுடன் ஒப்பிடுகையில் கௌதம் அதானி $55 பில்லியனை தனது சொத்துக்களில் சேர்த்துள்ளார்.

இந்நிலையில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சிறிய இழப்பை சந்தித்துள்ளது ஏனென்றால் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் சவூதி அரேபியா பப்ளிக் பெட்ரோலியம், நேச்சுரல் கேஸ் கம்பெனி மற்றும் அரம்கோ உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ததால்.

ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின் படி கௌதம் அதானியின் சொத்து மதிப்பு $88.8 பில்லியன் டாலர்களாக நவம்பர் 23 செவ்வாய்க்கிழமை அன்று இருந்தது. அதே சமயத்தில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு $91 பில்லியன் டாலர்களாக இருந்தது. இருப்பினும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு $1.32 பில்லியன் நவம்பர் 24 புதன்கிழமை அன்று குறைந்தது. அதே சமயத்தில் கௌதம் அதானி $375 மில்லியன் உயர்வைக்கண்டது.

கௌதம் அதானி குஜராத்தில் பிறந்தவர் இவர் இளம் பருவத்தில் தனது கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மும்பைக்கு சென்றார். அங்கு வைர வியாபாரத்தில் ஈடுபட்டு அந்த மாநிலத்திற்குத் திரும்பினார்.

கெளதம் அதானியின் சகோதரரின் பிளாஸ்டிக் வணிகத்திற்காக பாலிவினைல் குளோரைட்(PVC) இறக்குமதி செய்த போது உலகளாவிய வர்த்தகத்தில் கால் பதித்தார்.

கௌதம் அதானி 1988இல் அதானி என்டர்பிரைசஸ் என்ற முதன்மை நிறுவனமான பொருள்களை ஏற்றுமதி இறக்குமதி அனைவருக்கும் அவர் நிறுவினார்.

கௌதம் அதானி கிட்டத்தட்ட 75% அதானி பவர், அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், 64% அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம், 57% அதானி கிரீன் எனர்ஜி இதையெல்லாம் இவர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.