அஜித் பயன் படுத்திய கையுறை ஏலம்..!

*கையுறை ஏலம்*

நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் இறுதியாக ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் அஜித் குமார் வலிமை படத்தில் பயன்படுத்திய கையுறை ஏலத்திற்கு வந்தது.

இந்த கையுறையை அஜித்குமாரின் ரசிகர் ஒருவர் ஏலத்திற்கு வாங்கியுள்ளார். Kindness Foundationக்காக நடிகர் அஜித்குமார் Autograph செய்த கையுறையை பள்ளி குழந்தைகளின் நலனுக்காக கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏலம் விடப்பட்டது.

நடிகர் அஜித்குமார் Autograph செய்த கையுறையை அஜீத்தின் ரசிகரான பெங்களூருவைச் சேர்ந்த சூர்யா என்பவர் நிலத்தில் வாங்கியுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சூர்யா “இதற்காக கிட்டத்தட்ட ஒரு வருடம் காத்திருந்தேன், நடிகர் அஜித்தின் இந்த ஒற்றை நினைவுச் சின்னத்தின் உரிமையாளர் நான் என்று சொல்வதில் பெருமையாகவும் அதிர்ஷ்டமாகவும் கருதுகிறேன். இதை என்னிடமிருந்து வாங்க லட்சக்கணக்கானோர் லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வந்தனர் ஆனால் அது எல்லாத்தையும் விட இது எனக்கு அதிக மதிப்புடையது என்பதால் அதை அனைத்தையும் நிராகரித்தேன்“.

விரைவில் வெளியாக இருக்கும் அஜித்குமாரின் வலிமை திரைப்படத்தில் நடிகர் அஜித் இதே கையுறைகளை பயன்படுத்தியிருக்கிறார் என்பது எனக்குத் தெரிந்தது என்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று பதிவிட்டிருக்கிறார்.