அமேசான் பார்சல் பிரித்த பிறகு அதிர்ச்சியில் Gp muthu

*Gp Muthu*

டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர் தான் ஜிபி முத்து. இவர் தற்போது ரசிகர்கள் மனதில் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறார். இவரது வெகுளித்தனமான பேச்சும் அப்பாவியான குணமும் இவரை மிகவும் ரசிக்க செய்தது.

சமீபத்தில் ஜிபி முத்து ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்தார். ரசிகர்கள் தனக்கு அனுப்பும் பார்சல்களை பிரித்துப் பார்த்து அதை வீடியோ பதிவு செய்து தங்களுடைய யூடியூப் சேனல் பதிவு செய்தார்.

இந்த செயல் மிகவும் வரவேற்கப்பட்டு பல பேரால் பார்க்கப்பட்டு தற்போது 1 மில்லியனுக்கும் மேல் Subscribers ஜிபி முத்து சேனலை பின்தொடர்ந்து வருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஜிபி முத்து ஒரு பார்சல் பிரிக்கும் வீடியோவை பதிவு செய்தார். இதில் எப்போதும் போல் ஒசாமா பின்லேடன், ராபின் போன்ற பெயரில்தான் பார்சல்கள் வந்தன.

அந்த பார்சல் களிலும் எப்போதும் போல் சில அசிங்கமான விஷயங்களை மற்றும் சில ஜிபி முத்துவின் ஓவியங்கள் பரிசாக வந்தது. இதை ஜிபி முத்து ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு பார்சல் களையும் பிரித்து என்ன இருப்பது என்பதை கூறினார்.