நெட்டிசன்களுக்கு கிடைத்த சிறந்த விருந்து

*தனுஷ் ஐஸ்வர்யா*

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் மற்றும் அவரது மனைவி நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இருவரும் தங்களது 18 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக நேற்று சமூக வலைதளங்களில் தெரிவித்தனர்.

இந்த செய்தி சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர்கள் இப்படி முடிவெடுக்க காரணம் என்னவென்று பல்வேறு செய்திகள் மற்றும் வதந்திகள் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தி குடும்ப பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் நெட்டிசன் ஒருவர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை அழைத்துப் பேசி சேர்த்து வைக்குமாறு கூறியிருக்கிறார்.

அதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் “அவர்கள் மரியாதையுடன் பிரிந்து செல்கிறார்கள் ஒருவரை ஒருவர் குறை சொல்லி மனக்கஷ்டம் ஏற்படாமல், விவாகரத்திற்கு முன்பு வேறு ஒருவருடன் தொடர்பில் இல்லாமல் மரியாதையுடன் பிரிந்து செல்கிறார்கள் அவர்களை தனியாக விடுங்கள்” என்று கூறியுள்ளார்.