ரசிகர்களுக்கு 2 சர்ப்ரைஸ் கொடுக்கும் H.வினோத்..!

*H.வினோத்*

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற வெற்றி படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்தவர் எச்.வினோத். இந்த இரண்டு படங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜீத் குமாரை வைத்து நேர்கொண்ட பார்வை என்னும் திரைப்படத்தை இயக்கி வெற்றி கொடுத்தார்.

அதன் பிறகு மீண்டும் அஜீத் குமாருடன் இணைந்து வலிமை என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் பொங்கலுக்கு திரையில் வெளியாக உள்ளது. இப்படத்தை அஜித்தின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்தநிலையில் சதுரங்க வேட்டை 2 படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார் எச்.வினோத். நிர்மல் குமார் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக மொத்தம் இந்த ஜனவரி மாதத்தில் எச்.வினோதின் இரண்டு படங்கள் வெளியாக உள்ளது. இதில் குறிப்பாக அஜித்குமாரின் வலிமை திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாகும். சமீபத்தில் வலிமை திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.