இவருக்கு எத்தனை கோடி சொத்து மதிப்பு தெரியுமா..

*சொத்து மதிப்பு*

தமிழ் சினிமாவில் வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியவர் எஸ் ஜே சூர்யா. அதனைத் தொடர்ந்து குஷி, நியூ, அன்பே ஆருயிரே படங்களை இயக்கியுள்ளார். நியூ படத்தில் நடிகராகவும் அறிமுகமானார். அன்பே ஆருயிரே திரைப்படத்திற்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து இசை படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்தார். அதன் பிறகு இவரது திறமையால் ஸ்பைடர், மெர்சல், மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்களால் தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மிரட்டினார். தற்போது வெளிவந்த மாநாடு படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். அதிலும் தனது நடிப்பால் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

சமீபத்தில் நடிகர்களின் சொத்து மதிப்புகள் இணையதளங்களில் வெளியாகி வருகிறது. அதேபோல் எஸ் ஜே சூர்யாவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

எஸ் ஜே சூர்யாவின் சொத்து மதிப்பு ரூபாய் 9 கோடி என தகவல் கூறுகிறது. ஆனால் பல ரசிகர்கள் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் எஸ் ஜே சூர்யா இவருடைய சொத்து மதிப்பு வெறும் 9 கோடி தானா என்று அதிர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.