வலிமை படத்தின் முதல் வார வசூல் இத்தனை கோடியா?

*வலிமை முதல் வார வசூல்*

அஜித்குமாரின் வலிமை திரைப்படம் வெளியாகி முதல் வாரத்தை கடந்துள்ளது, தமிழ் படமான வலிமை ஏழே நாட்களில் உலக பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக வலிமை திரைப்படம் ரூபாய் 122 கோடி வசூலித்துள்ளது. அதே சமயம் வெளிநாட்டு பாக்ஸ் ஆபீஸில் ரூபாய் 43 கோடி சேர்த்துள்ளது. அஜித்தின் வலிமை திரைப்படத்தின் உலகளாவிய வசூல் ரூபாய் 165 கோடி என்று கூறப்படுகிறது.

வர்த்தகர் கண்காணிப்பாளர்களின் கூற்றுப்படி, வலிமை திரைப்படம் அனைத்து வயதான பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு இழுத்துள்ளது. கோலிவுட்டில் 2022ல், திரைக்கு வந்த முதல் பெரிய படம் என்பதால், மக்கள் திரையரங்குகளுக்கு அதிகம் வந்துள்ளனர்.

இருப்பினும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, ஹிந்தி பதிப்பில் படம் பெரிய அளவில் வியாபாரம் செய்யவில்லை.

தமிழ்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் மட்டும் வலிமை திரைப்படம் ரூபாய் 100 கோடி வசூல் செய்துள்ளதாக பட விளம்பரர் ரமேஷ் பாலா தெரிவித்துள்ளார்.