ஸ்பானிஷ் பொட்டேட்டோ ஆம்லெட் செய்வது எப்படி..?

*செய்வது எப்படி*

ஸ்பானிஷ் பொட்டேட்டோ ஆம்லெட் செய்ய தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு,வெங்காயம்,முட்டை,எண்ணெய்.

முதலில் தேவையான முழு உருளைக்கிழங்கை எடுத்துக் கொண்டு நன்றாக கழுவ வேண்டும் பிறகு அதை சிப்ஸ் போன்ற வடிவில் தேவையான அளவு நறுக்கி கொள்ள வேண்டும். வெங்காயத்தை தேவையான அளவு நறுக்கி கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கடாயில் நறுக்கி வைத்த உருளைக்கிழங்கையும் வெங்காயத்தையும் போட்டு வதக்க வேண்டும் வதக்கிய பிறகு தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வதக்கி வைத்த உருளைக்கிழங்கையும் அதற்கு ஏற்ப முட்டைகளையும் உடைத்து உருளைக்கிழங்குடன் சேர்த்து கலக்கிக் கொள்ளவேண்டும்.

தேவையான அளவு உப்பை சேர்த்து கொள்ள வேண்டும்.

*ஸ்பானிஷ் பொட்டேட்டோ ஆம்லெட் ரெடி*

முட்டையை பொரிப்பதற்கு தோசைக்கல்லை எடுத்து எண்ணெய் ஊற்றி சூடு படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு கலக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு முட்டையையும் தோசைக்கல்லில் ஊற்றி பொரிக்க வேண்டும். பிறகு பொரித்த அந்த முட்டையை பின்புறமாக திருப்பி போட்டு பொரித்துக் கொண்டால் ஸ்பானிஷ் பொட்டேட்டோ ஆம்லெட் ரெடி….