எனக்கு தல மாறி தளபதி மாறி பேச வராதுங்க..?

*ராம் சரண்*

சென்னையில் RRR திரைப்படத்திற்கான Pre Release Event நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குனர் ராஜமவுலி, படத்தின் கதாநாயகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் தமிழ் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் கலந்து கொண்டனர்.

பாகுபலி படத்திற்கு பிறகு தற்போது ராஜமவுலி தனது பிரம்மாண்டமான அடுத்த படைப்பை படைத்துள்ளார். RRR திரைப்படம் பாகுபலி அளவிற்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் பட்ஜெட் சுமார் 400 கோடி.

வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இப்படத்தின் Pre Release Eventல் ராம்சரன் பேசினார். முதலில் ராம்சரண் தெலுங்கில் பேசி படக்குழுவினர்களுக்கு மற்றும் அனைவருக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்தார். பிறகு ராம் சரண் கொஞ்சம் கொஞ்சமாக தமிழில் பேசினார். எழுத்தாளர் மதன் கார்க்கிக்கு டப்பிங் தியேட்டரில் தமிழில் பேச உதவியதற்காக நன்றி கூறினார்.

தமிழ் சூப்பர் ஸ்டார், அஜித், விஜய் சார்கள் போல் எங்களுக்கு தமிழ் பேச வராது. ஆனால் நாங்கள் பேசினால் ரசிகர்கள் நீங்கள் ரசிப்பீர்கள் என் கூறினார். இறுதியாக தன்னுடைய ரசிகர்களுக்கு பெரிய நன்றி கூறி உரையை முடித்துக் கொண்டார்.