என்னல அந்த படத்துல நடிக்க முடியாது கமல்ஹாசன்..?

*பாபநாசம் 2*

2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் மலையாளத்தில் இயக்கி வெளிவந்த படம் தான் இந்த த்ரிஷ்யம். இப்படத்தில் மோகன்லால், மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

தமிழிலும் இப்படத்தை ஜீத்து ஜோசப் முண்ணனி நடிகர்களான கமல்ஹாசன், கௌதமி மற்றும் கலாபவன் மணி ஆகியோரை வைத்து இயக்கியிருந்தார். தமிழிலும் இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியை பெற்றது.

இப்படங்களின் வெற்றியால் ஜீத்து ஜோசப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருந்தார். பொதுவாக இந்திய சினிமாவில் ஒரு படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்தால் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை போல் துள்ளியமாக அதேபோல் ரசிக்கும்படியான திரைப்படமாக அமைவது குறைவாகவே இருக்கும்.

ஆனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப் அருமையாக கையாண்டிருந்தார். அதனால் த்ரிஷ்யம் 2 படம் பிரபலமாகி பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது பாபநாசம் 2 படத்தை இயக்க ஜீத்து ஜோசப் தயாராக உள்ளார்.

இதிலுள்ள சிக்கல் என்னவென்றால் கமல் கௌதமி ஆகிய இருவரும் தங்களது வாழ்க்கையில் பிறந்துள்ளதால் இப்படத்தில் மீண்டும் இணைந்து நடிப்பது கடினம்.

திரிஷ்யம் 2 திரைப்படம் OTT தளத்தில் வெளியாகியதால் அனைத்து மொழி ரசிகர்களும் இப்படத்தை பார்த்து விட்டனர் இதனால் இப்படத்தின் கதை எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. இதனால் இப்படத்தில் நடிப்பதற்கு கமல் தயங்குகிறார். அதுமட்டுமல்லாமல் கமல் ‘விக்ரம்’ மற்றும் ‘இந்தியன் 2‘ திரைப்படங்களிள் நடித்து வருகிறார்.