எனக்கு இந்த படத்தில் நடிக்க சம்பளம் வேண்டாம்..!

*சம்பளம் வேண்டாம்*

தமிழ் சினிமாவில் முதலில் இயக்குனராக அறிமுகமாகி பிறகு வில்லனாக நடித்து தற்போது முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் நபர்தான் சமுத்திரக்கனி.

சமுத்திரக்கனி ஒரு நல்ல இயக்குனரை தாண்டி தற்போது ஒரு சிறந்த நடிகர் என்று சமீபத்தில் வெளியாகிய அவருடைய படங்கள் நமக்கு காட்டுகின்றன. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் நடித்து வருகிறார்.

தெலுங்கில் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பு இருக்கிறது என்றே கூறலாம். தெலுங்கில் சில படங்களில் நடித்ததால் சமுத்திரக்கனிக்கு பிரம்மாண்ட படமான பாகுபலியை இயக்கிய ராஜமவுலியின் அடுத்த படமான RRR படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

பொதுவாக நிறைய நடிகர்களுக்கு ராஜமவுலியின் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆசைப்படுவார்கள் அதேபோல்தான் சமுத்திரகனியும் ஆர்வமாக இருந்தார். எனக்கு சம்பளம் கூட வேண்டாம் ராஜமவுலியின் திரைப்படத்தில் நடித்தாலே போதும் என்ற எண்ணத்தில் தான் சமுத்திரகனி இருந்துள்ளார்.

இறுதியாக RRR படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளர்கள் இவருக்கு சம்பளம் இரண்டு என்று கூறி முடித்துள்ளார்கள். சமுத்திரகனி 2 லட்சம் போல என்று நினைத்து இருந்துள்ளார். இறுதியாக இவருக்கு சம்பளம் கொடுக்கையில் இரண்டு கோடியை கொடுத்துள்ளனர்.

இதனால் சமுத்திரகனி ஆச்சர்யம் அடைந்துள்ளார். சம்பளமே வேண்டாம் என்று கூறியவருக்கு இவ்வளவு சம்பளம் கொடுப்பதற்க்கு காரணம் ராஜமவுலியின் மகனான எஸ்எஸ் கார்த்திகேயா தான். ஏனென்றால் எஸ்எஸ் கார்த்திகேயாவிற்கு சமுத்திரகனியின் நடிப்பு மிகவும் பிடிக்குமாம்.

அடுத்ததாக எஸ்எஸ் கார்த்திகேயா தயாரிக்க உள்ள படத்தில் சமுத்திரக்கனிக்கு 1.50 கோடி சம்பளம் என கூறப்படுகிறது. தெலுங்கு சினிமா சமுத்திரகனிக்கு சம்பளத்தை வாரி வாரி வழங்குகிறார்கள். கூடிய விரைவில் சமுத்திரகனி Bollywoodல் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.