நடிகர் அஜித்தை வைத்து பாகுபலி மாதிரி 5 படம் எடுப்பேன்

இரண்டு வருடங்களாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்குமாரின் திரைப்படம் வலிமை பிப்ரவரி 24ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. வலிமை திரைப்படம் அனைத்து இடத்திலும் நல்ல வரவேற்பினை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, வெறும் மூன்றே நாட்களில் ரூபாய் 100 கோடி வசூலை இப்படம் பெற்றுள்ளது, இப்படி மூன்று நாட்களில் 100 கோடி பெறுவது தமிழ் படங்களில் இதுவே முதல் முறை.

மேலும் இப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் பெரும் என்ற எதிர்பார்ப்பு தயாரிப்பாளர்களிடமிருந்து கிடைத்துள்ளது, இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூபாய் 175 கோடி என கூறப்பட்டுள்ளது, படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே சுமார் 300 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வலிமை திரைப்படம் இப்படி பல சாதனைகள் படைத்து வருவதால் அஜித் குமாரின் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

*ராஜமௌலி*

தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் எனப்படுபவர் ராஜமௌலி, பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு தற்போது பிரம்மாண்டமாக RRR என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார், இப்படம் வரும் மார்ச் மாதம் 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் வலிமை திரைப்படத்தை பார்த்தேன் அஜித் சார் மிகவும் சூப்பராக நடித்திருக்கிறார், இந்த வயதில் பிரமாதமாக நடிப்பது, Stunt செய்தது என்னை வியக்க வைக்கிறது. அஜித் குமார் போல் ஒரு நடிகர் எனக்கு கிடைத்தால் நான் பாகுபலி திரைப்படம் போல் ஐந்து படங்கள் பிரம்மாண்டமாக எடுப்பேன்” என்று ராஜமவுலி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் RRR திரைப்படத்தின் Promotion பணிகளில் Coffee with DD நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜமௌலி, “அஜித் குமார் என்னை தல என்று யாரும் அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தது அவர் மேல் எனக்கு பெரும் மரியாதையை ஏற்படுத்தியது. மேலும் சில காலங்களுக்கு முன் ஒரு காபி ஷாப்பில் அஜீத் குமாரை நான் சந்தித்தேன் அவர் மிக கண்ணியமாக மரியாதையுடன் என்னிடம் பேசினார்” என்று குறிப்பிட்டார்.

ராஜமௌலியின் திரைப்படமான RRR திரைப்படம் வரும் மார்ச் மாதம் 25ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ஐந்து மொழிகளில் வெளியாகிறது, இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகருமான ராம்சரண், ஜூனியர் என்டிஆர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.