வலிமை படத்தை OTT ரிலீஸ் செய்தால் பல கோடி தருகிறோம்

*வலிமை*

அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் தான் வலிமை. அஜித்குமார், கார்த்திகேயா, ஹேமா குரேஷி போன்ற பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக இந்தப் படத்தை அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இறுதியாக இப்படம் ஜனவரி 13-ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியிடுவதாக படக்குழு அறிவித்தனர்.

தற்போது கொரோனாவின் மூன்றாவது அலை இந்திய முழுவதும் வெகு வேகமாக பரவி வருகிறது இதனால் தமிழ்நாடு அரசாங்கம் ஊரடங்கு மற்றும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தியேட்டர்களில் 50% இருக்கைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. இந்நிலையில் RRR போன்ற பெரிய பெரிய படங்கள் வெளியாகாமல் ஒத்தி வைத்துள்ளனர்.

இதனால் வலிமை படத்தின் குழுவினர்களும் நேற்று படத்தின் வெளியீட்டை தள்ளிப் போடுவதாக குறிப்பிட்டனர். இதனால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். எப்போது வெளியாகும் என்பதை பின்னர் அறிவிப்பதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் பல OTT தளங்கள் வலிமை படத்தின் பட்ஜெட்டில் இருந்து 70 சதவீதம் கூடுதலாக தருகிறோம் என்று கூறி படத்தை OTT தளத்தில் வெளியிடுவதற்கு பேசி வருகின்றனர். ஆனால் வலிமை படக்குழு படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என்ற முடிவில் உள்ளார்களாம்.

அஜித்குமார் ரசிகர்கள் அனைவரும் வலிமை படத்தை தியேட்டரில் தான் பார்க்க விரும்புகிறார்கள்.