இந்த காபி குடித்தால் 3 நாள் தூங்கிக் கொண்டே இருப்போம்

*காபி*

காபி என்பதை நாம் அன்றாட வாழ்வில் ஒரு முறை அல்லது இரு முறையாவது குடிப்பது வழக்கம். சிலர் பெட் காபி குடிப்பதையும் வழக்கமாக வைத்திருப்பார்கள். டீஐ விட காபியை பலர் விரும்பி குடிப்பார்கள். உலக மக்கள் பல பேருக்கு காபி ஒரு தனி பிரியம் என்று கூறலாம்.

பலவிதமான காபி வகைகள் உள்ளன. ஏராளமான காபி வகைகள் இருக்கும் நிலையில் அதை பட்டியலிடுவது முடியாத காரியமாகும். அதில் ஒரு வகையான காபியை பற்றி மட்டும் இந்தப் பதிவில் பார்ப்போம்.

உலகத்திலேயே ஸ்ட்ராங்கான Death Wish Instant Coffee என்று இதற்குப் பெயர். உலகத்திலேயே இதுதான் அதிக சக்தியுடைய காபி என்று கூறப்படுகிறது. இதில் நார்மலான காபியின் சக்தியிலிருந்து 200 மடங்கு சக்தி இந்த காபியில் இருக்கிறதாம்.

உங்களில் யாருக்காவது தூக்கம் வந்துக்கிட்டே இருக்கா? அப்போ இந்த காபியை வாங்கி குடியுங்கள் உங்களுக்கு மூன்று நாள் தூக்கம் வரவே வராது.

இந்த காபியை குடித்த நபர்களிடம் இதைப்பற்றி கேட்டபோது இதைக் குடித்த பிறகு அவர்களுக்கு மூன்று நாள் தூக்கம் வரவே இல்லை என்று கூறினார்கள். இந்த Death Wish Instant Coffee பல ஆன்லைன் இணைய தளங்களில் கிடைக்கிறது.