விஜய் சேதுபதியின் அடுத்த படம் மீது இளையராஜா புகார்..!

*சேதுபதியின் மீது இளையராஜா புகார்*

விஜய் சேதுபதி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், மராத்தி என பல மொழிகளில் சாதனை படைத்து வருபவர். “காக்கா முட்டைமணிகண்டன் இயக்கத்தில் “கடைசி விவசாயி” திரைப்படம் அவரது அடுத்த வெளியீடாக உள்ளது. படத்திலுள்ள உள்ளடக்கத்தால் ஈர்க்கப்பட்ட விஜய் சேதுபதி சமீபத்தில் படத்தின் தயாரிப்பிலும் சேர்ந்தார்.

இசைஞானி இளையராஜா “கடைசி விவசாயி” திரைப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் அவர் பின்னணி இசையையும் முடித்தார். இருப்பினும் மணிகண்டன் இளையராஜாவின் படைப்புகளிள் ஈர்க்கப்படவில்லை மற்றொரு இசையை அவரிடம் கேட்டார் அதற்க்கு இளையராஜா மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

மணிகண்டன் பின்பு பின்னணி இசையை சந்தோஷ் நாராயணனுடம் மாற்றினார் மேலும் ஒரு புதிய பட ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. “கடைசி விவசாயி” திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சங்கத்தில் இளையராஜா தனக்குத் தெரியாமல் அனுமதியின்றி இந்த மாற்றம் செய்யப்பட்டதாக புகார் அளித்தார்.

இந்த ஆண்டு டிசம்பரில் திரைக்கு வரத் திட்டமிருந்த இப்படத்திற்கு அச்செயல் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.