Irfan’s View சேனலை முடக்கியதற்கு காரணம் என்ன?

பிரபல யூட்யூப் Food Vlogger இர்பான் உடைய சேனல் Irfan’s View தற்போது யூட்யூப் நிறுவனத்தால் முடக்கப்பட்டுள்ளது, இச்சம்பவம் இன்று மாலை அளவில் நடைபெற்றுள்ளது, இதனை அறிந்த இர்பான் மற்றும் அவருடைய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

யூடியூப் நிறுவனம் ஒரு கம்யூனிட்டி ஆக செயல்பட்டு வருகிறது அவர்களுக்கான சில கட்டுப்பாடுகள் விதிமுறைகள் இருக்கின்றன, இந்த கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை யூடியூப் தளத்தை உபயோகிக்கும் அனைத்து நபர்களுக்கும் பொருந்தும். அந்தக் கட்டுப்பாடுகளை மீறினால் யூடியூப் நிறுவனம் தங்களுடைய செனல்களை முடக்கிவிட வாய்ப்புள்ளது.

தற்போது இச்சம்பவத்தை பற்றி இர்பான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அதாவது தனது சேனலை எதற்காக முடக்கினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, சேனலை திருப்பி எடுப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன, தனது ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது இச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்து கொண்டிருக்கின்றது, இர்பான் தற்போது தனது யூடியூப் சேனலில் “Turkey Episodes” வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment