எலோன் மஸ்க் vs முகேஷ் அம்பானி போட்டி வர போகுதா?

*எலோன் மஸ்க் vs முகேஷ் அம்பானி*

எலோன் மஸ்கிற்கும் முகேஷ் அம்பானிக்கும் 2022ல் இன்டர்நெட்டை வைத்து போட்டி வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஏனென்றால் 2022ல் எலோன் மாஸ்க் தன்னுடைய ஸ்டார்லிங் சாட்டிலைட் இன்டர்நெட் சர்வீசை இந்தியாவில் அமைக்கப்போவதாக கூறி வருகிறார்.

ஒருவெளை எலோன் மஸ்க் உடைய ஸ்டார்லிங் சேட்டிலைட் இன்டர்நெட் சர்வீஸ் இந்தியாவிற்கு வந்துவிட்டால் ஜியோ, ஏர்டெல் போன்ற நெட்வொர்க்கை விட பத்து மடங்கு வேகமாக இருக்குமாம்.

அதேபோல் காடு, மலை, கிராமம் போன்ற இடங்களில் ஜியோ ஏர்டெல் போன்றவை சிக்னல் கிடைப்பது மிக கடினமாக இருக்கும். ஆனால் எலோன் மஸ்கின் ஸ்டார்லிங் சாட்டிலைட் இன்டர்நெட் சர்வீஸ் மூலமாக இந்தியாவில் உள்ள காடு, மலை, பாலைவனம், சந்து பொந்து போன்ற அனைத்து இடங்களிலும் இன்டர்நெட் சேவை கிடைக்கும்.

இந்த ஸ்டார்லிங்க் உடைய இன்டர்நெட் பேக்கேஜ் எல்லாம் நாம் இப்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஜியோ, ஏர்டலை விட குறைவான விலையில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஸ்டார்லிங் சாட்டிலைட் இன்டர்நெட் சர்வீஸ் 2022 தொடங்கி சில மாதங்களிலேயே வந்துவிடும் என்று கூறப்படுகிறது.