இன்று முதல் இவைக்கு தடையா..?

*தடை*

ஜனவரி 6ஆம் தேதி(இன்று) முதல் இது இயங்கும்? எது இயங்காது? என்று அரசாங்கம் கூறியதைப் பற்றி பார்ப்போம்.

இரவு நேர ஊரடங்கு – இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை என்று கூறியுள்ளது. இதில் எது இயங்காது என்று பார்த்தால் வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் உணவகங்கள் இயங்காது. எது இயங்கும் என்று பார்த்தாள் பேருந்து சேவைகள், பால், செய்தித்தாள், ஏடிஎம், மருந்தகம், பெட்ரோல் பங்குகள், சரக்கு வாகனங்கள், தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கும்.

ஜனவரி 9ஆம் தேதி முழு ஊரடங்கு (ஞாயிற்றுக்கிழமை) – அன்று எது இயங்கும் என்று பார்த்தால் பால், ஏடிஎம், மருந்தகம், பெட்ரோல் பங்குகள் மற்றும் சரக்கு வாகனங்கள் இயங்கும். எது இயங்காது என்று பார்த்தால் பொதுப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காது. காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கப்படும்.

மேலும் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை. 10,11,12ஆம் இவைகளுக்கு நேரடி வகுப்புகளுக்கு அனுமதி.

50% பயணிகள் மட்டும் பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் பயணம் செய்யலாம். பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்களுக்கு தடை. அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் வெள்ளி சனி ஞாயிறு இந்த மூன்று நாட்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்களுக்கும் தடை.

திருமணத்தில் அதிகபட்சமாக 100 பேர் கலந்து கொள்ளலாம். இறப்பு நிகழ்வில் அதிகபட்சமாக 50 பேர் கலந்து கொள்ளலாம். துணி மற்றும் நகை கடைகள், உடற்பயிற்சி கூடங்கள், உணவகங்கள், திரையரங்குகள், உள் விளையாட்டு அரங்கம், சலூன் அழகு நிலையங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதி. டாஸ்மார்க் பற்றி அறிவிப்பு இல்லை.