இதுக்கு ஒரு முடிவே இல்லையா..?

*சிவகார்த்திகேயன்*

சிவகார்த்திகேயன் நடித்து கடந்த மாதம் வெளியாகிய “டாக்டர்” திரைப்படம் மூலமாக டாப் நடிகராக வலம் வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் சிங்கப்பாதை, அயலான், டான் போன்ற தமிழ் படங்களிலும் மற்றும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் புதிதாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் அதன்படி மடோன் அஸ்வின் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளாராம். “மண்டேலா” திரைப்படம் மடோன் அஸ்வின் இயக்கி பெரும் வரவேற்பை பெற்றது.

மடோன் அஸ்வின் சிவகார்த்திகேயனை வைத்து இயக்க உள்ள படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழில் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் இருந்தாலும் அவருக்கும் ஏராளமான கடன் பிரச்சனைகள் உள்ளது. ஆனால் “வாழ்” என்னும் படத்தை அருண் பிரபுவை வைத்து இயக்கினார். ஆனால் அப்படம் படுதோல்வியை சந்தித்தது.

அருண் பிரபு இதற்குமுன் “அருவி” என்னும் சிறப்பான படத்தை இயக்கியவர். இரண்டாவது படமான “வாழ்” ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. அருண் பிரபு சிவகார்த்திகேயனின் சொந்தக்காரர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாடோன் அஸ்வின் தனது இரண்டாவது படத்தை இயக்க உள்ளார் அதில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க உள்ளார். என்ன ஆகப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.