இது நம்ம லிஸ்டுல இல்லையா?

*பிக் பாஸ்*

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தமிழ் பிக் பாஸ் சீசன் 5 இன்னும் சில தினங்களில் முடிவை எட்டப் போகிறது. இதில் இன்னும் 10 போட்டியாளர்கள் மீதம் உள்ளனர்.

பொதுவாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வாரத்திற்கு ஒருவர் நாமினேஷன் அடிப்படையில் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அந்த வகையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் சிபி, நிரூப், பிரியங்கா, பவானி, அக்ஷரா, அருண் ஆகிய ஆறு பேர் உள்ளனர். தாமரைச்செல்வி இந்த வார வீட்டின் தலைவரால் அவரை யாரும் நாமே செய்ய முடியாது.

இதில் ராஜு, அமிர், சஞ்சீவி ஆகிய மூவரும் நாமினேஷனிலிருந்து தப்பித்து விட்டனர். கடந்தவாரம் இறுதியாக காப்பாற்றப்பட்டவர் வருண் இந்த வாரமும் இவர் நாமினேஷன் லிஸ்டில் உள்ளார் அந்த அடிப்படையில் இந்த வார இறுதியில் வீட்டில் இருந்து வெளியேறுவது வருணாக இருக்கலாம் என்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

அதேபோல் மக்களிடையே குறைவான ஆதரவு பெற்றுள்ள நிரூப் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதிக வாய்ப்புள்ளது.

இதனடிப்படையில் நிரூப் மற்றும் வருண் ஆகிய இருவரில் ஒருவர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று கணிக்கப்படுகிறது.